செய்திகள் :

Sai Abhyankkar: "ரீல்ஸ்களில் வரவேண்டும் என்பதற்காக பாடல்கள் செய்யமாட்டேன்" - சாய் அபயங்கர்

post image

'கருப்பு', அட்லீ - அல்லு அர்ஜூன் திரைப்படம், தனுஷின் 55-வது படம் எனப் பிரமாண்ட லைன்-அப்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.

சுயாதீனப் பாடல்கள் மூலம் மியூசிக் கரியரைத் தொடங்கியவர் இன்று குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்

சமீபத்தில் அவருடைய 5-வது சுயாதீனப் பாடலான 'பவழமல்லி' பாடல் வெளியாகியிருந்தது.

அப்பாடலின் ப்ரோமோஷனுக்காக மெர்சி ஜான் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் ரீல்ஸ் கண்டெண்டிற்காக பாடல்கள் செய்யமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் சாய் அபயங்கர் பேசுகையில், "நான் பாடல் வரும் சமயத்தில்தான் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பேன்.

நான் அந்தப் பாடலை எப்படி விளம்பரப்படுத்தலாம், எப்படியான வழிகளில் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என யோசிப்பேன்.

அதைத் தாண்டி, ரீல்ஸ் கண்டெண்டிற்காக ஒரு பாடல் செய்ய வேண்டும் என நினைத்ததே கிடையாது. ஆனால் உங்களுடைய பாடல்களில் ஹூக் இருக்கிறதே எனக் கேட்டால், அது கண்டிப்பாக பாடல்களில் இருக்க வேண்டும்.

அந்தப் பகுதி மிகவும் பிரஷாக இருக்க வேண்டும் என முயற்சி செய்துக் கொண்டே இருப்பேன்" எனக் கூறியிருக்கிறார்.

சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்

இதனைத் தொடர்ந்து அவர், "நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது, தொடர்ந்து நான் கம்போஸ் செய்த பாடல்களை ரஹ்மான் சாருக்கு அனுப்பி மெயில் ஸ்பேம் செய்துக் கொண்டே இருந்தேன்.

அவர் அதைப் பார்த்திருப்பாரா என்று கூடத் தெரியவில்லை. 8-ம் வகுப்பு முடித்த பிறகு, என் பேஷன் மியூசிக்தான், அதனால் என் படிப்புக்கு பணம் செலவழிக்க வேண்டாம் என்று என் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

"நான் லைம்லைட்டுல இருந்து கொஞ்சம் மறைஞ்சுட்டேன்" - 'ஆரண்ய காண்டம்' கொடுக்காப்புளி பேட்டி

தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' இந்த வாரம் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் ரிலீஸில் பெரியளவில் கொண்டாடப்படாத இத்திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடினார்... மேலும் பார்க்க

அடியே... (பேச்சுலர்) : "இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்!" - ஜிகேபி | வரித்துணையே 9

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

" 'வீரம்' படப்பிடிப்பின்போது எனக்கு இட்லி செய்து கொடுத்தார்"- அஜித் குறித்து பகிர்ந்த தமன்னா

தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசிவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. மேடையில் பேசிய தமன்னா," தற்போது... மேலும் பார்க்க

"தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.!" - 'சிறை' பற்றி வெற்றிமாறன்

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் 'சிறை' படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம... மேலும் பார்க்க

சிறை: "காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!"- விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில்... மேலும் பார்க்க