செய்திகள் :

Shikhar Dhawan: `Almost the Dhawans' - திருமணம் குறித்து அறிவித்த ஷிகர் தவான்; மணமகள் யார் தெரியுமா?

post image

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அயர்லாந்தில் பிறந்த சோபி ஷைன் (Sophie Shine) என்பவரைத் திருமணம் செய்யவிருக்கிறார்.

மன உளைச்சலுக்கு ஆளான ஷிகர் தவான்

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது 'Da One Sports' என்ற விளையாட்டு அகாடமி மற்றும் தனது அறக்கட்டளை மூலம் பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். இவருக்கும் இவரின் முதல் மனைவிக்கும் கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து நடந்தது. அதைத் தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். அந்த இக்கட்டான காலத்தில் சோபி ஷைன் ஷிகர் தவான் வாழ்க்கையில் வந்திருக்கிறார்.

ஷிகர் தவான் திருமணம்
ஷிகர் தவான் திருமணம்

ஷோபி ஷைன்

1990-ல் அயர்லாந்தில் பிறந்த சோபி ஷைன், அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆலோசகராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அபுதாபியில் உள்ள 'நார்தர்ன் டிரஸ்ட் கார்ப்பரேஷன்' நிறுவனத்தில் 2025 மார்ச் வரை துணைத் தலைவராக பணியாற்றினார். தற்போது ஷிகர் தவானின் 'டா ஒன் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும், ஷிகர் தவான் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து சமூகப் பணிகளை கவனித்து வருகிறார்.

திருமணம்

ஷிகர் தவான் மற்றும் சோபி ஷைன் இருவருக்கும் இடையிலான நட்பு துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் தொடங்கியது. 2024 ஐபிஎல் போட்டிகளின் போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவளிக்க சோபி வந்திருந்தபோது, இருவருக்குமான காதல் குறித்த தகவல்கள் கசிந்தன. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இருவரும் இணைந்தே கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம், சோபி ஷைன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். இந்த நிலையில்தான் இருவருக்குமான திருமணம் முடிவாகியிருக்கிறது. இவர்களது திருமணச் சடங்குகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சங்கீத் விழாவின் புகைப்படங்களை தவான் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

A.R.Rahman: ``ஒரே ஒரு ரீல்ஸ்ல ஆரம்பிச்சது..." - ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்டில் பாடியது குறித்து அலெக்ஸ்

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், A.R. ரஹ்மானின் "The Wonderment Tour" என்ற கான்சர்ட், பிப்ரவரி 14 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 40,000 பேர் வரை கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறத... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `137 படப் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை' - இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை அவர் பயன்படுத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பிரபல இசை நிறுவனமான 'சரிகம' (Saregama) இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ... மேலும் பார்க்க

மிலான் குளிர்கால ஒலிம்பிக்: 3 நாள்களில் 10,000 ஆணுறைகள் காலி; ஒலிம்பிக் கமிட்டி சொன்ன பதில் என்ன?

இத்தாலியின் மிலான்-கோர்டினா (Milan-Cortina) பகுதியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகப் பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடம், டேபிள் ஃபுட்பால், ஏர் ஹ... மேலும் பார்க்க

SIR: ``கண் தெரியாத அம்மாவுடன் பல நாள்களாக அலைகிறேன்" - பாமர நபரின் ஆதங்கம் | வைரலாகும் வீடியோ

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் ... மேலும் பார்க்க

சிறுமிகளை விரட்டிவிட்டு கங்கைக்குப் பால் அபிஷேகம்; வைரலான வீடியோவும்... எழுந்த விவாதங்களும்!

இந்துகளின் புனித நதிகளில் ஒன்று கங்கை கங்கையில் நீராடினால், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. கங்கையில் நீராடியவர்களின் ஏழு தலைமுறைகளை பாவம் அணுகாது என்றும் சொல்வதுண்டு. கங்கை ந... மேலும் பார்க்க

துலாபாரத்தில் நாய்: நடிகையின் செயலால் வைரலான வீடியோ; பக்தர்கள் கண்டனம் - நடிகையின் விளக்கம் என்ன?

தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா. இவர் கடந்த புதன்கிழமை தெலங்கானா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பழங்குடியின தெய்வங்க... மேலும் பார்க்க