'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் ...
Sirai: "நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன்" - 'சிறை' படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த 'சிறை' திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார்.

'7 Screen Studio' லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் சங்கர் 'சிறை' படத்தைப் பாராட்டித் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "'சிறை' உண்மையிலேயே ஒரு சிறந்த படம். நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவற்றில் நடித்த நடிகர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன.
விக்ரம் தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாகப் பிரதிபலித்தது.
இந்த அருமையான படத்தை நமக்கு வழங்கிய தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இயக்குநர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை ‘சிறை’ பிடித்துவிட்டார்.
இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும், இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது" என்று படத்தைப் பாராட்டி இருக்கிறார்.


















