செய்திகள் :

SRH Vs RR: `அதிரடி சரவெடி...' 4 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனம் ஈர்த்த இளம் வீரர் சகிப் ஹுசைனின் கதை!

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் அறிமுக பந்துவீச்சாளரான சகிப் ஹுசைன் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது திறமையை நிரூபித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார். பலரும் சகிப் ஹுசைனின் பந்துவீச்சை பாராட்டி வருகின்றனர்.

சகிப் ஹுசைன்
சகிப் ஹுசைன்

யார் இந்த சகிப் ஹுசைன் ?

சகிப் ஹுசைன் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு வயது 21. நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் கொண்ட பெரிய குடும்பத்தில், சாகிப் இரண்டாவது மகன். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட சகிப்பின் தந்தை கூலி வேலை செய்கிறார்.

தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், சகிப் முதலில் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்கு உதவி செய்து வந்திருக்கிறார். ஆனால், இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பயிற்சியாளர் ராபின்சன் உடனான சந்திப்பு.

சகிப்பிடம் இருந்த வேகத்தையும் திறமையையும் கண்டறிந்த பயிற்சியாளர் ராபின்சன், அவரை டென்னிஸ் பந்து விளையாட்டிலிருந்து முறைப்படியான லெதர் பால் கிரிக்கெட்டுக்கு மாற்றியிருக்கிறார்.

சகிப்பின் திறமையை அங்கீகரித்த கிரிக்கெட் அகாடமி, அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கியது. பயிற்சியாளர் ராபின்சனிடம் இருந்து கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட சகிப், பிகாரின் U19 அணியில் விளையாடி அதிக விக்கெட்களை எடுக்கிறார்.

சகிப் ஹுசைன்
சகிப் ஹுசைன்

இதையடுத்து சையது முஷ்டாக் அலி டிராபியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 2024- ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் இணைந்து சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். வாழ்த்துகள் சகிப் ஹுசைன்

`முடிவெடுக்கும் பிசிசிஐ' - சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு ... மேலும் பார்க்க

Tim David: ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்; காரணம் என்ன?

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்திருக்கிறது.ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.12) மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 18 ரன்க... மேலும் பார்க்க

SRH Vs RR: "இந்தத் தோல்வியைப் பற்றி ஃபீல் பண்ண எங்களுக்கு நேரம் இல்லை!" - கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது... மேலும் பார்க்க

SRH Vs RR: "இந்த வெற்றிக்கு எங்களின் பந்துவீச்சாளர்கள் தான் காரணம், ஏனென்றால்.!"- இஷான் கிஷன்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி... மேலும் பார்க்க

பந்தைக் கொடுக்காமல் டிம் டேவிட் செய்த செயல்; கோபமடைந்த நடுவர்கள் - என்ன நடந்தது?

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், பந்தை நடுவர்களிடம் கொடுக்க மறுத்த ஆர்சிபி அணியின் டிம் டேவிட்டால் நடுவர்கள் கோபமடைந்த சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் ... மேலும் பார்க்க

MI vs RCB: "நாங்கள் இன்னும் கூடுதல் ரன்கள் அடித்திருக்க வேண்டும்; ஆனால்..." - ஆட்டநாயகன் பில் சால்ட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.சிறப்பாக விளையாடிய பில் சால்ட் ஆட்டநாயகன் ... மேலும் பார்க்க