செய்திகள் :

Suriya: "So proud of you..." - ஜோதிகாவின் படத்தைப் பாராட்டிய சூர்யா!

post image

சூர்யாவின் 'கருப்பு' படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதன் பிறகு ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிப்பில் உருவான 'சிஸ்டம்' திரைப்படம் கடந்த மே 22-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

Jyothika's System Movie
Jyothika's System Movie

'கருப்பு' திரைப்படம் வெளியான சமயத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு சூர்யா குடும்பத்துடன் சென்றிருந்த காணொளி இணையத்திலும் வைரலானது.

தற்போது அத்திரைப்படம் பற்றி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சூர்யா.

அந்தப் பதிவில் அவர், "தாமதமான பதிவுதான், இருந்தாலும் இதைச் சொல்ல வேண்டும். 'சிஸ்டம்' திரைப்படம் சுவாரஸ்யமான மற்றும் நம்மை கட்டிப்போடும் திரைப்படம்.

அழுத்தமான நடிப்போடும், பல அடுக்குக் கதைக் களத்தோடும் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகள். சோனாக்ஷி சின்ஹா, நேஹாவாக நடித்திருந்தது மிகவும் பவர்ஃபுல்லாக இருந்தது.

ஜோதிகா அவர் நடித்த கதாபாத்திரமாகவே முற்றிலும் மாறிவிட்டதை பார்த்தேன். நான் எப்போதுமே அறிந்த ஒன்றை இப்போது இந்த உலகமே பார்க்கிறது. உங்களது மௌனம் வார்த்தைகளை விட சத்தமாகப் பேசுகிறது.

உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் பொண்டாட்டி. ப்ரைம் வீடியோ தளத்தில் இந்தத் திரைப்படம் பெற்று வரும் அசாத்தியமான வரவேற்பிற்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க