செய்திகள் :

Tamil Cinema: திரைப்பட நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்கக்கூடாதா!- தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு என்ன?

post image

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் என அனைவரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில், சில முக்கியமான தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

அதில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கவோ இயக்கவோ கூடாது என்கிற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அந்த ஆலோசனைக் கூட்டம் குறித்தும், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக சிக்கலாக பேசப்படும் விஷயத்திற்கும் எப்படி தீர்வு காணப்பட்டது என்பது குறித்தும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தனஞ்செயனிடம் பேசினோம்.

அவர், "அந்தக் கூட்டத்தில் அனைத்து நடிகர்கள் என சொல்லப்படவில்லை. அனைத்து நடிகர்களையும் சொல்லியிருக்கிறோம் என தவறாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கைதான் வைத்திருக்கிறோம். இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அ

வர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் ஓடிடி படங்கள், சீரிஸ்கள் என கவனம் செலுத்தினால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது.

அதுபோல, முன்னணி இயக்குநர்களும் ஓடிடியை தவிர்த்து தியேட்டருக்கான திரைப்படங்களை இயக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம்." என்றவரிடம், "ஓடிடி-க்கு படம் தயாரித்தாலும் அது தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைதானே கொடுக்கும்." எனக் கேள்வி எழுப்பினோம்.

Dhananjeyan
Dhananjeyan

இதற்கு பதிலளித்தவர், "தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, ஓடிடி ப்ராஜெக்ட்கள் மூலம் பெரியளவில் பலன் கிடையாது. ஓடிடி நிறுவனங்கள், அவர்களின் சொந்த தயாரிப்பாக, ஒரிஜினல் படைப்புகளைக் கொண்டு வருகிறார்கள்.

இதனால் தனிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் வாய்ப்பும் லாபமும் கிடைப்பதில்லை. எனவே, சினிமா துறையில் நலன் கருதி நடிகர்கள் தியேட்டருக்கான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஒருமித்த முடிவை எடுத்திருக்கிறோம். அனைத்து நடிகர்களுக்கும் இதை சொல்லவில்லை என்பது இங்கு தெளிவுபடுத்த வேண்டிய விஷயம்." என்றார்.

"நீண்ட காலமாக திரையரங்குகளில் வெளியான படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி-யில் வரவேண்டும் என்கிற கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறதே, அதற்கு இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?" எனக் கேட்டோம். அதற்கு, "அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறோம்.

Theatre
Theatre

ஓடிடி நிறுவனங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்தே வாங்குவதால், அனைத்து மாநிலத் திரையுலகினரும் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். மற்ற மொழி திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee) அமைத்து இறுதி முடிவு எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்." என்றார்.

"வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில்.." - சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்!

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தாமல் தவறியதாக, திமுக அரசைக் கண்டித்... மேலும் பார்க்க

சூர்யாவின் 'கருப்பு'வில் சிம்பு பாடிய பவர்ஃபுல் பாடல்; வேகமெடுக்கும் `அரசன்' ஷூட்டிங் - பரபர அப்டேட்

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் 'அரசன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கிறது. 'அரசன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பல வாரங்கள் ஆனதும்... மேலும் பார்க்க

Happy Raj: "பஞ்சாயத்துக்கு தீர்ப்பு வழங்கபோய் நம்ம படத்தை செஞ்சிட போறாங்க'ன்னு.!"- விஜய் சேதுபதி

பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ், கெளரி பிரியா நடித்திருக்கும் படம் 'ஹேப்பி ராஜ்'. பியாண்ட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் மார்ச் 27 ... மேலும் பார்க்க

Jailer 2 Exclusive: 'ஜெயிலர் 2'வில் ஷாருக்கான் கேமியோ; சண்டிகரில் படமாகும் காட்சிகள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் ரஜினி காந்த் படம் ரிலீஸாகும். இப்போது, 75 வயதில் 'ஜெயிலர் -2', அடுத்து ஏப்ரல் மாதத்தில் சிபி சக்ரவர்த்தி டைரக்ஷனில் நடிக்கப் போகிறார். இ... மேலும் பார்க்க

Sai Abhyankkar: "ரீல்ஸ்களில் வரவேண்டும் என்பதற்காக பாடல்கள் செய்யமாட்டேன்" - சாய் அபயங்கர்

'கருப்பு', அட்லீ - அல்லு அர்ஜூன் திரைப்படம், தனுஷின் 55-வது படம் எனப் பிரமாண்ட லைன்-அப்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். சுயாதீனப் பாடல்கள் மூலம் மியூசிக் கரியரைத் தொடங்கியவர் இ... மேலும் பார்க்க

"நான் லைம்லைட்டுல இருந்து கொஞ்சம் மறைஞ்சுட்டேன்" - 'ஆரண்ய காண்டம்' கொடுக்காப்புளி பேட்டி

தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' இந்த வாரம் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் ரிலீஸில் பெரியளவில் கொண்டாடப்படாத இத்திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடினார்... மேலும் பார்க்க