செய்திகள் :

TAPS: `கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்' - ஸ்டாலின் அதிரடி | முழு தகவல்

post image

'பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்' - இது அரசு ஊழியர்களிடம் இருந்து தொடர்ந்து எழுந்துவரும் கோரிக்கை.

இந்தக் கோரிக்கைக்கு சற்று நிறைவேற்றும் விதமாக, கொஞ்சம் மாறுதல்களோடு இன்று 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)' அறிமுகப்படுத்தி உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

ஓய்வூதியம்
ஓய்வூதியம்

TAPS திட்டத்தில் இடம்பெறுபவை என்னென்ன?

> மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இந்த 50 சதவிகித உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவிகித பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதியை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

> 50 சதவிகிதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

> ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

> அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

> புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

> பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியம்
ஓய்வூதியம்

> மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.

இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும்.

தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும். " என அறிவித்துள்ளார்,

DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா... தேர்தல் நேர எதார்த்தமா?'

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் தொடர் படையெடுப்பும், மாநிலக் கட்சிகளின... மேலும் பார்க்க

TAPS: `இது ஓய்வூதியத் திட்டமல்ல, சிறு சேமிப்புத் திட்டம்'- ஒரு தரப்பு அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

அரசு ஊழியர்களின் 23 ஆண்டுக்கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மு... மேலும் பார்க்க

`தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்று என் கண்களுக்குத் தெரியாது' - டி.டி.வி.தினகரன்

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் உள்ள மஹாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, பல்வேறு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மூலம்... மேலும் பார்க்க

தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 1 மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மணா‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு… எங்கள் பகைவர் எங்கோ மறைந்தா... மேலும் பார்க்க

சென்னை: பயன்பாட்டுக்கு வந்த மெரினா `இரவு நேர காப்பகம்' - விரிவாக்கும் திட்டத்தில் சென்னை மாநகராட்சி!

சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தளம் என்பதையும் தாண்டி, பலரின் வாழ்வாதாரத்திற்கான வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. சிறு உணவு கடைகள் தொடங்கி கைவினை பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், குதிரைகளை வைத்து ப... மேலும் பார்க்க

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைக... மேலும் பார்க்க