செய்திகள் :

'Thala For A Reason' இல்ல 'சின்ன பையன்லாம் தல மேலயே அடிக்கிறான் சார்!'' - CSK பரிதாபங்கள்!

post image

முதல் போட்டியில் பெங்களூரு வென்றுவிட்டது. இரண்டாவது போட்டியில் மும்பை வென்றுவிட்டது. 'இப்போ நாம ஜெயிக்கலன்னா மானக்கேடா ஆச்சேயா...' என்கிற பதைபதைப்புடன் தான் நேற்றைய போட்டியை சி.எஸ்.கே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஏன் சார் டென்சன் ஆகுறிங்க...உடம்புக்கு ஆகாது! ஜெயிக்கிறோமா தோக்குறோமாலாம் இல்ல தோக்குறோம் அவ்வளவுதான் என்கிற முடிவோடு ஆடி ராஜஸ்தானிடம் சென்னை அணி தோற்றதைப் போல இருக்கிறது.

RR vs CSK
RR vs CSK

'நாங்க காயம்பட்ட சிங்கமா வரோம்...' எனக் கேப்டன் ருத்துராஜ் சீசனுக்கு முன்பாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார். கேப்டன் உத்வேகமாகப் பேசினாலும் 'காயத்தோடலாம் ஆட முடியாதுய்யா' எனத் தோனி, ப்ரெவிஸ் உட்பட பல முக்கியமான சிங்கங்கள் நேற்றைய போட்டியில் ஆப்செண்ட்.

தோனி ஆடவில்லை என்றவுடன் அவரின் ரசிகர்கள் டாஸூக்கு முன்பே ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர்.

'தோனி காயத்தால் ஆடாமல் இருந்த 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும்தான் சென்னை இதுவரை வென்றிருக்கிறது. இதுதான் தோனி. இப்போதாவது தோனியின் முக்கியத்துவம் புரிகிறதா?' என மாஸ் பிஜிஎம்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.

தோனி ரசிகர்களின் ரகளையில், 'இவனுக நிஜமாவே டீம் ஜெயிக்குறதுக்குத்தான் சப்போர்ட் பண்றானுகளா...' என ருத்துராஜே கொஞ்சம் குழம்பிப் போயிருப்பார்.

Ruturaj
Ruturaj

'போன சீசன்ல எல்லா மேட்ச்சும் இறங்கி பெரியவர் உருட்டுன உருட்டையெல்லாம் மறந்துட்டானுக போல...' எனக் கம்பீர் ரசிகர் போட்ட கமெண்டை மட்டும் தோனி ரசிகர்கள் டெலீட் செய்துவிட்டு கமுக்கமாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.

டாஸில் ருத்துராஜ் கெய்க்வாட், 'We're going with '7' Batters' என நமட்டு சிரிப்புடன் கூறினார். தோனி ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். ஒருவேளை தப்பித் தவறி ஜெயித்துவிட்டால் கூட 'Thala For a Reason' எனப் போஸ்டர் அடிக்க அப்போதே தயாராகிவிட்டனர்.

எதிர்ப்பக்கத்தில் ரியான் பராக் கேப்டன். சும்மாவே ஆடுவார். இப்போது முழுநேர கேப்டனாக ப்ரமோட் வேறு ஆகிவிட்டார்! சொல்லவா வேணும். முதல் பென்ச் ஸ்டூடண்ட், கடைசி பென்ச் ஸ்டூடண்ட், காலேஜ் ப்யூன், டிபார்ட்மெண்ட் HOD என எல்லாரின் அட்டிடியூடிலும் ஒரு ஸ்பூன் அள்ளிப் போட்ட அட்டிடியூடோடு இருந்தார்.

Samson
Samson

இந்தப் போட்டியின் இன்னொரு முக்கியமான ஹைலைட் ஜடேஜாவும் சாம்சனும். ஜடேஜா கம்பேக் கொடுப்பதற்காக ஹேர்கட் பண்ணிக் கொண்டு Rugged Look இல் இருந்தார். சாம்சன் வேர்ல்ட் கப் ஹேங் ஓவரோடு வந்தார். இருவரில் ஜெயித்தது ஜடேஜாதான். சிவம் துபேவுக்கு எதிராகவெல்லாம் 'முடிஞ்சா அடிச்சு பாரு' என வீசி விக்கெட் எடுத்தார். சர்பராஸ் கானையும் வெளியேற்றியிருந்தார். சாம்சனுக்குத்தான் ராஜஸ்தானுக்கு எதிராக அடிக்க மனமே வரவில்லை.

'தர்மத்தின் தலைவன்' பிரபுவைப் போல ஓங்கிய கையை... அப்படி காற்றிலேயே ஓங்கியபடியே நிப்பாட்டி பர்கரின் பந்தில் போல்டாகி வெளியேறியிருந்தார். ருத்துராஜி வியூகத்தையெல்லாம் சமீபமாகப் புரிந்துகொள்ளவே முடியவே இல்லை.

கடந்த சீசனில் ஆடினால் நம்பர் 3 இல்தான் ஆடுவேன் எனத் தனக்கு ஒத்தே வராத இடத்தில் ஆடி கடுப்பேற்றினார். இந்த முறை செய்த தவறைத் திருத்திக் கொண்டு ஓப்பனிங் வந்துவிட்டார். ஆனால், ஆயுஸ் மாத்ரேவை நம்பர் 3 க்கு இறக்கிவிட்டார்.

'என்னய்யா டீலிங் இது?' அடுத்தப் போட்டியில் ஆயுஸை ஓப்பனிங் இறக்கிவிட்டு ருத்துராஜ் நம்பர் 3 க்கு வருவார். அப்படி மியூசிக்கல் சேர் மட்டும் ஆடினால் சென்னை ரசிகர்கள் இந்தச் சீசனையும் சாமிக்கு விட்டுவிடலாம்.

Jadeja
Jadeja

6, 6, 0, 2, 17, 18 திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய சீட் எண்ணிக்கையை போல இருக்கும் இதுதான் சென்னை வீரர்கள் எடுத்த ரன். ஜேமி ஓவர்ட்டன் மட்டும்தான் கொஞ்சம் காப்பாற்றினார். நின்று ஆடி 43 ரன்களை அடித்தார். அவரால்தான் 100 ரன்களையாவது சென்னை அணி தொட்டது.

ராஜஸ்தானுக்கு டார்கெட் 128. 'புல்லட் நீங்க இறக்குனா மட்டும்தான் இறங்குமா... எங்க கிட்டயும் முரட்டு பௌலர்ஸ் இருக்காங்க' எனச் சென்னை ரசிகர்கள் மனதைத் தேற்றிக் கொண்டு ராஜஸ்தானின் இன்னிங்ஸைப் பார்த்தனர். ராஜஸ்தான் அணி என்ன கோவத்தில் இருந்ததோ தெரியவில்லை, 'சின்னப் பையன்லாம் எகிறி எகிறி அடிக்கிறான்' மோடில் ஜெய்ஸ்வாலும் சூர்யவன்ஷியும் 10 ஓவருக்குள் மேட்ச்சை முடிக்கும் எண்ணத்தோடு ஆடினர்.

ஜெய்ஸ்வால்லை கம்போஜ் வீழ்த்தினாலும் சூர்யவன்ஷி Annual Day இல் எக்குத்தப்பாக ஆடும் சிறுவனைப் போல கன்னாபின்னாவென ஆடி போட்டியை முடித்துக் கொடுத்தார்.

12.1 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி.

இப்போதெல்லாம் சென்னை ரசிகர்களுக்கு சென்னை அணி தோற்பதிலெல்லாம் பிரச்னை இல்லை. அது பழகிவிட்டது. '10 அடி வாங்கினால் ஒரு அடியாவது திருப்பி அடிங்களேன் சார்...வெளியே தலைகாட்ட முடியல. இந்த ஆர்.சி.பி பேன்ஸ்லாம் கலாய்க்குறாங்க!' என்பதுதான் பிரச்னையே.

சூர்யவன்ஷி
சூர்யவன்ஷி

ஆனால், தோனி ரசிகர்களுக்கு வேறு ஒரு பிரச்னை. நேற்றைய போட்டியில் மட்டும் தோனி ஆடியிருந்தால் போட்டி முடிந்தவுடன் சூர்யவன்ஷி எப்படியும் தோனி காலில் விழுந்திருப்பார். அதை வைத்து 'Thala For a Reason' என ஆறுதல்பட்டிருக்கலாம். பச்...இப்போது அந்த வாய்ப்பும் மிஸ்ஸிங்

'சீசனை தோல்வியோடு தொடங்கிய சி.எஸ்.கே!' - எப்படி வென்றது ராஜஸ்தான்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.RR vs CSKம... மேலும் பார்க்க

'ஆடினே இருப்பேன்!' - காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! - எப்படி வென்றது?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், 'எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்' கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி ... மேலும் பார்க்க

வாடகை பாக்கியால் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு; இந்திய கால்பந்துக்கு மீண்டும் ஒரு அவமானம்!

இந்தியா - ஹாங்காங் இடையேயான கால்பந்து போட்டி மார்ச் 31-ம் தேதி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. 2016-க்குப் பிறகு இந்திய அணி கொச்சியில் விளையாடும் முதல் சர்வதேசப் போட்ட... மேலும் பார்க்க

`திருமணத்துக்கு யாரும் பெண் தரல; உறங்க மது குடிக்கிறேன்!' - கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் வேதனை

முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான லட்சுமண் சிவராமகிருஷ்ணன் தனது 17 வயதிலேயே கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான சிவராமகிருஷ்ணன் இனவெறிப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

'நீங்க 60 வயசு வரைக்கும் ஆடணும் சார்' - SK வுக்கு தோனி சொன்ன பதில் என்ன?

'Roar 26' என்ற பெயரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை அணியின் முன்னாள் வீரர்களுடனான போட்டி, ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி என களைகட்டிய இ... மேலும் பார்க்க

'கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!' - சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்!

'Roar 26' சி.எஸ்.கே ரசிகர்களுக்காக அணி நிர்வாகம் ஒரு சிறப்பு நிகழ்வை சேப்பாக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் சென்னை அணியின் முன்னாள் 'OG' வீரர்கள் ஒரு அணியாகவும், இப்போதைய வீரர்கள் ஓர் அ... மேலும் பார்க்க