செய்திகள் :

Tour: கோடையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறீர்களா - இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

post image

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலங்களாக இருந்து வரும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் தனியார் வாகனங்களில் சுற்றுலா செல்ல இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.

கோடை காலங்களில் ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானலை நோக்கி பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் முதல் மிதமிஞ்சிய காற்று மாசு வரை பாதிப்பு ஏற்படுவதாக சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஊட்டி

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றுலா நடவடிக்கைகள் இயங்க வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு வழிகாட்டுதல்களை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி வருகிறது. இ- பாஸ் எனப்படும் ஆன்லைன் முன்பதிவு அனுமதி உள்ள நிலையில், தற்போது அதில் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்..!

இது குறித்த நீதிபதிகளின் உத்தரவில் , " ஊட்டிக்கு வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம். அதேபோல் கொடைக்கானலுக்கு வார நாள்களில் 4 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாளகளில் 6 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம்.

உள்ளூர் வாகனங்கள், விவசாய வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு பஸ், ரயில் மூலம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.

ஊட்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல்.

வருகின்ற ஏப்ரல் 1 - ம் தேதி முதல் ஜூன் மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஏப்ரல் 25 - ம் தேதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை அமல்படுத்த கூடுதலாக காவல்துறையினரை நியமிக்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு இ - பாஸ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பஸ்கள் இயக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னையில் இப்படி ஓர் இடமா! - Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் spot!

சென்னையின் அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி, நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இது 1875 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் `குணா குகை' தெரியும்; இது என்ன `குக்கல் குகை' - மிஸ் செய்யக்கூடாத சூப்பர் ஸ்பாட்!

கொடைக்கானலில் பிரபலமாக இருக்கும் குணா குகை பற்றி தான் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இங்கு கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கும் குக்கல் குகைகள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். தெ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 3 விதமாக காட்சியளிக்கும் ‎சோட்டானிக்கரை ‎பகவதி அம்மன்! - சிலிர்ப்பனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Socotra: 825 வகை தாவரங்கள்; 700 வகை உயிரினங்கள்; வேற்றுகிரகம் போல காட்சியளிக்கும் பாலைவன தீவு!

சகோத்ரா, ஏமனில் உள்ள ஒரு பாலைவனத் தீவு. உலக அளவில் இன்ஃப்ளூயன்சர்களாலும் சுற்றுலா செல்லும் பணக்காரர்களாலும் பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த தீவு, சர்வதேச சுற்றுலா செல்லும் வாய்ப்புள்ள அனைவரும் சென்று ... மேலும் பார்க்க

`இருக்கு ஆனா இல்ல...' - ஐ.நா-வால் `நாடாக' அங்கீகரிக்கப்படாத நாடுகள் பற்றி தெரியுமா?!

எல்லைகள், பாஸ்போர்ட்டுகள், தேசிய கீதங்கள் இவை ஒரு நாட்டின் அடையாளங்களாக கருதப்படுகிறது. சில இடங்கள் நாடுகளைப் போலவே செயல்படுகின்றது. ஆனால் அவற்றை உலகின் பிற நாடுகள் நாடுகளாக கருதுவதில்லை. அப்படி நாடுக... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) கீழ் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தனியார் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.இந்த ... மேலும் பார்க்க