செய்திகள் :

Tv update: 'செகண்ட் லவ்' ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?

post image

மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!

காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான 'ஆனந்த ராகம்' தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.

அந்த தொடர் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஓடிய போதே, சீரியல் ஏரியா அழகப்பனை ஏற்றுக் கொண்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.

அந்த தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது அதே சன் டிவியில் 'சிறகுகள்' என்ற புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார்.

'ஆனந்த ராகம்' அழகப்பன்

அழகப்பனிடம் பேசிய போது,

''காரைக்குடிப் பக்கத்துல இருக்கிற கொத்தமங்கலம் எங்க ஊரு. நான் நடிக்க போறேன்னு சொன்னப்ப எங்க அம்மா 'அவன் விருப்பம்'னு சொல்லிட்டாங்க. அப்பா ரொம்பவே பயந்தார். திட்டினார். நடிக்கப் போய் தோத்தவங்கதான் நிறையனு சொல்றாங்க. பேசாம வேற நல்ல வேலை எதுவும் தேட வேண்டியதுதானே'ன்னார். பையன் எதிர்காலத்து மேல இருந்த அக்கறை அது.

வீட்டு ஆதரவு ஒருமனதாக இல்லாத சூழலும் ஒரு வகையில எனக்கு உதவுச்சு. ஒருவித பயம் இருந்ததால சின்சியரா முயற்சி செய்துட்டே இருந்தேன்.

துணை நடிகரா காமெடிக் காட்சிகளில் வந்து பல சிரமங்களுக்கிடையில் ஒருவழியா கதாநாயகன் ஆனேன். அந்த சீரியல் நல்ல பெயர் வாங்கித் தந்தது.

அதனால அந்த தொடர் முடிவடைந்ததுமே வேற வேற இடங்கள்ல இருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனா 'ஆனந்த ராகம்' வாய்ப்பைத் தந்த சன் டிவியில 'வெயிட் பண்ணுங்க'னு சொன்னாங்க. சரின்னு இருந்தேன். இப்ப ஹீரோவா மறுபடி ஒரு வாய்ப்பு அமைஞ்சிருக்கு. தயாரிப்பாளர்களுக்கும் சேனலுக்கும் என் நன்றிங்கிறது வெறுமனே ஃபார்மாலிட்டிக்கான‌ வார்த்தைகள் இல்ல.

ஏன்னா, இன்னைக்கு போட்டி நிறைஞ்ச இடமா சின்னத்திரையும் மாறிட்ட சூழல்ல இந்த இடத்துக்கு வர்றதுக்குள் நான் பட்ட சிரமங்கள் எனக்கு மட்டுமே தெரியும்' என நெகிழ்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் | Ramya Krishnan

செகண்ட் லவ்! ஏன் மும்பையில் ஷூட்டிங்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முழு ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. இது குறித்து ஏற்கெனவே விகடன் தளத்தில் செய்தி வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனமே இந்த நிகழ்ச்சியையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் வார இறுதிகளில் தொகுத்து வழங்க, நடிகை ஸ்ருதிகாவும் ஒரு தொகுப்பாளராக தினமும் வருகிறார்.

sruthika

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை சென்னையில் வைக்காமல் மும்பையில் நடத்தியது குறித்து டிவி ஏரியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அது குறித்து விசாரித்தபோது,

''டிவி ரியாலிட்டி ஷோக்கள் ஷூட்டிங் செய்ய சென்னையில் இல்லாத வசதி வாய்ப்புகளா? பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. விஜய் டிவி, ஜீ தமிழ் இரண்டின் சீரியல்களுமே ஒரே நேரத்தில் இங்கு ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.

பிக்பாஸ் வீடு ஒவ்வொரு வருடமும் இங்குதான் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடக்கிறது. சொல்லப்போனால் மலையாள பிக்பாஸ் செட் கூட கடந்த காலங்களில் இதே இடத்தில் நடந்தது.

இப்படியிருக்க, 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை மும்பையில் நடத்தியதற்குக் காரணம், தேவையற்ற சலசலப்புகள் உருவாகி ஷூட்டிங் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தானாம்" என்கிறார்கள் நிகழ்ச்சியின் உள் விவகாரங்கள் அறிந்த சிலர்.

கடந்த காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தபோது சில அரசியல் கட்சிகள் அந்த நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்தது நினைவிருக்கலாம்.

'' `செகண்ட லவ்' கான்செப்ட்டும் தமிழுக்குப் புதிது என்பதால் நிகழ்ச்சியை முழுவதுமாகப் பார்க்காமலேயே 'எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என யாராவது கிளம்பி ஷூட்டிங்க் ஸ்பாட்டில் பிரச்னை செய்தால்? கடந்த காலத்தில் பிக்பாஸ்க்கு எதிராக இப்படிச் சிலர் கிளம்பி போராட்டம் பண்ணியதை மனதில் வைத்தே, ஷூட்டிங்கை மும்பைக்குக் கொண்டு போய் விட முடிவு செய்தார்களாம்.

ஒளிபரப்பு தொடங்கிய பிறகு எதிர்ப்பு ஏதும் வரவில்லையென்றால் அடுத்தடுத்த சீசன்களை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்'' என்கிறார்கள் அவர்கள்.

"`எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்ல‌; தந்த வாக்குக்காக வர்றேன்'னு வந்தார் சாலமன் பாப்பையா"- மதுரை முத்து

மதுரை திருநகரில் இரண்டாவது நூலகத்தைத் திறந்துள்ளார், மதுரை முத்து. தன்னுடைய பூர்வீக கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நூலகத்தை நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நூலகத்தை சாலமன் பாப்பையாவை வைத்து திறந்து வைத்திர... மேலும் பார்க்க

`அப்பாவை ரஜினி சார் கூட்டி வரச் சொன்னார், அதுக்குள்ள...' - மனம் கலங்கும் `லொள்ளு சபா' ஜீவா

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. அடிப்படையில் நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தவர். சின்னத்திரையைத் தாண்டி சினிமா பக... மேலும் பார்க்க

’பிக்பாஸ் காமன்மேன்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகும் அந்த இருவர் யார் யார்?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 துவங்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் சூழலில், இந்த வருடம் புது முயற்சியாக ’பிக்பாஸ் காமன் மேன்’ என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த... மேலும் பார்க்க

Bigg Boss: இந்த வருஷம் இதெல்லாம் புதுசு! - `காமன்மேன்' பிக் பாஸ் ஷோவுக்கு யார் பாஸ்?

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார்.வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல் இந்த வருடம் நிகழ்ச்சியில் 0... மேலும் பார்க்க

Serial update: அபிதா வெளியேறிய பின்னணி... போரட்டத்துக்குத் தயாராகும் சீரியல் ஆர்ட்டிஸ்ட்டுகள்!

'சந்தியா ராகம்' தொடரிலிருந்து நடிகர் ராஜ்கமலும் 'சின்னஞ்சிறு கிளியே' தொடரிலிருந்து நடிகை அபிதாவும் வெளியெறி இருக்கிறார்கள்.இரண்டு பேருமே அவரவர் நடித்து வந்த தொடர்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து... மேலும் பார்க்க

ராஜ்மோகன் எங்க உறுப்பினர்; ஆனாலும் முதல்வரை பார்க்க‌ அப்பாயின்ட்மென்ட் கிடைக்கல!- டிவி நடிகர் சங்கம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் முதலமைச்சரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கிறார்கள், சின்னத்திரை சங்க நிர்வாகிகள்.நடந்து முடிந்த சட்டசபைத... மேலும் பார்க்க