செய்திகள் :

TVK : 'கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு!' - தவெக தீர்மானம்!

post image

தவெக-வின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. இந்த பொதுக்குழுவில் கரூரில் திட்டமிடப்பட்டு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தப்பட்டதாக தீர்மானம் வாசித்திருக்கிறார்கள்.

மதியழகன்
மதியழகன்

மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து தவெகவின் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் முதல் தீர்மானமே கரூரில் உயிர் நீத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம். அந்த தீர்மானத்தை கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனே வாசித்தார். விஜய் அவரை ஆரத்தழுவி வரவேற்று தீர்மானத்தை வாசிக்க அனுப்பி வைத்தார்.

அவர் வாசித்த அந்த தீர்மானம், 'கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வெற்றித் தலைவர் மக்கள் சந்திப்பு பயணங்களை நடத்தினார். தலைவரின் அனல் பறக்கும் பேச்சும் ஆளும் அரசை நோக்கிய கேள்விகளும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது ஆள்வோருக்கு எரிச்சலூட்டியது.

இதனால் கரூரில் திட்டமிட்ட பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தி செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டதோ எனும் அளவுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தது. லட்சியப்பயணத்தில் பங்கெடுக்க வந்த உயிர் நீத்த அவர்களுக்கு பொதுக்குழுவின் இரங்கல்.' என்றார்.

பொதுக்குழு
பொதுக்குழு

இதேமாதிரி எட்டாவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் விஜய்யின் மக்கள் சந்திப்புகளுக்கு இதுவரை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை. மக்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கும் அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கரூர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க