செய்திகள் :

UAE வெளியேறியது இருக்கட்டும்; OPEC என்றால் என்ன? அதன் பணி என்ன? - தெரிந்துகொள்வோம் வாங்க!

post image

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறியதே உலக அளவில் தற்போதைய ஹாட் டாப்பிக்.

இந்த அமைப்பில் இருந்தால் ஒரு நாளைக்கு 3.6 மில்லியன் பீப்பா எண்ணெய் தான் உற்பத்தி செய்ய முடியும்... 2027-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்வது ஐக்கிய அரபு அமீரகத்தின் இலக்கு. இதனால் தான், அந்த நாடு OPEC அமைப்பில் இருந்து வெளியேறுகிறது என்று கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகமோ, 'இது கொள்கை ரீதியிலான முடிவு' என்று கடந்துவிட்டது.

OPEC
OPEC
இதெல்லாம் இருக்கட்டும்... OPEC என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்... வாங்க!

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு என்பதன் சுருக்கமே OPEC. 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

இந்த அமைப்பை நிறுவிய ஐந்து நாடுகள் - ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலா.

பெயரில் இருப்பதுபோலவே, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் சில நாடுகளின் அமைப்பே இந்த அமைப்பு.

ஏன் இந்த அமைப்பு?

இந்த அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு, எண்ணெய் சந்தையை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில எண்ணெய் நிறுவனங்கள் தான் கட்டுக்குள் வைத்திருந்தன.

அவை தான் எண்ணெய் உற்பத்தியையும், எண்ணெயின் விலையையும் முடிவு செய்து வந்தன.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தான் எண்ணெய் சந்தையை நிர்ணயிக்க வேண்டும் என்கிற கொள்கை அடிப்படையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் எண்ணெய் சந்தை இருக்கும் போது, அவர்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க முடியும்... எண்ணெய் சப்ளையை தொடர்ச்சியாக வைத்திருக்க முடியும் என முடிவு செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் - OPEC
கச்சா எண்ணெய் - OPEC

OPEC-ன் பணி என்ன?

எண்ணெய் சந்தையையும், எண்ணெய் உற்பத்தி நாடுகளையும் வரைமுறைப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய பணி.

மேலும், ஒவ்வொரு எண்ணெய் உற்பத்தி நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் இந்த அமைப்பே முடிவு செய்யும்.

இதன் மூலம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ற உற்பத்தியும் நடக்கும். உலகத்திற்கு சரியான அளவிலான எண்ணெய் சப்ளையும் இருக்கும்.

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ED வழக்கு ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2006 - 2011 ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட், மனைவி பர்வீன் உள்ளிட்ட சி... மேலும் பார்க்க

"இறுதி ஊர்வலங்களில் ஒழுங்கற்ற தன்மை; முறைப்படுத்த புதிய சட்டம் தேவை" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம் அருகே ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது அவர்களை மறித்து சென்ற கல்லுரி பேருந்து மீது மதுபோதையில் இருந்த சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.மேலும் மத... மேலும் பார்க்க

குஜராத்: Z+ பாதுகாப்பு, கண்காணிப்புக் கோபுரம், 50 பேர் பாதுகாப்பு; இருந்தும் 'கானமயில் குஞ்சு' மாயம்

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அபூர்வமாக கடந்த 24ம் தேதி கானமயில் குஞ்சு (Bustard chick) ஒன்று பிறந்திருந்தது. மிகவும் அபூர்வமான அழிந்து வரும் உயிரினமாக அது கருதப்படுவ... மேலும் பார்க்க

`பருத்தி விளைஞ்ச பூமி சாமி இது! இன்னும் எத்தன உசுரு?!' - அரசுக்குக் கேட்குமா சிவகாசியின் அபயக்குரல்?

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகள், இந்தியாவின் பட்டாசுத் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் மையங்களாகத் திகழ்கின்றன. பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச... மேலும் பார்க்க

25 ஏக்கரில் கல்லூரி... வெறும் 15 மாணவர்கள்; `ரூ.289 கோடி அவ்வளவுதானா?' - PDUIA-ன் அவல நிலை!

இந்தியாவின் தொல்லியல் துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்' (PDU... மேலும் பார்க்க

கோவையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள் - காரணம் என்ன?

கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக... மேலும் பார்க்க