செய்திகள் :

Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!

post image

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின.

இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர்
பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர்

இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்!

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம்,

“உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது.

அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது.

இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன்.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்?

ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது.

வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது.

முறையான பராமரிப்பின்றி இருக்கும் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம்... அவதியுறும் பொதுமக்கள்!

கும்பகோணம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லையென்று மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து அங்கிருந்த பயணிகளிடம் கேட்கும் போது," கும்பகோணம் பேருந்து நிலையம் மிக ... மேலும் பார்க்க

Indigo: திணறும் இண்டிகோ; விண்ணைத் தொட்ட விமான டிக்கெட் விலை - மத்திய அரசு நடவடிக்கை!

இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நேற்றையதினம் ஆயிரத்துக்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் விமான ரத்துகள் தொடர்கிறது. நிலைமை இயல்புநிலைக்குத் திரும்ப டிசம்பர் 10-15 வரை ஆக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விவாதப் பொருளாகியிருக்கிறது. தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவதற்கு... மேலும் பார்க்க

TVK: `கியூ-ஆர் கோடு பாஸ்; 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!' - புதுச்சேரி கூட்டத்துக்கு தயாராகும் தவெக

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வ... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணை கட்ட பயன்படுத்தபட்ட தொன்மையான 'கலவை இயந்திரம்' ஏலத்தில் விற்பனையா? - அதிர்ச்சி

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லை பெரியாறு அணை. இந்த அணையானது 1886-ல் கட்ட தொடங்கி, 10.10.1895 ல் கட்டி முடிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை கட்டுமானத்திற்காகவே பித்யோகமான கலவை இயந்திரம் இங்க... மேலும் பார்க்க

Indigo: ``மற்ற நிறுவனங்கள் பிரச்னையை சந்திக்கவில்லை; இண்டிகோ மட்டும் எப்படி?" - அமைச்சர் கேள்வி

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக... மேலும் பார்க்க