ஏவி.எம்.சரவணன்: `என்னமோ மனசு கேட்கல; மயானம் வரை போய்.!’ - கலங்கிய சிவகுமார்
வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to
வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தான் டைம். அதற்குள் பான் கார்டை, ஆதார் கார்டு உடன் இணைத்துவிடுங்கள். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும்.

என்ன பிரச்னை?
பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டால் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, வருமான வரி ரீ-ஃபண்ட் பெறுவது, முதலீடுகள், வங்கி பரிவர்த்தனைகள் போன்றவை மிகவும் சிரமமாகி விடும்.
மீண்டும் புதிய பான் கார்டு பெற்றாலோ அல்லது பான் கார்டு புதுப்பிக்கப்பட்டாலோ தான் மேலே கூறியவைகளை எளிதில் மேற்கொள்ள முடியும்.
இந்தப் பான் - ஆதார் இணைப்பை இவர்கள் தான் செய்ய வேண்டும்... அவர்கள் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பான் வைத்திருக்கும் அனைவருமே இந்த இணைப்பை செய்ய வேண்டும்.
ஆதார் - பான் இணைப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி இ-ஃபைலிங் வலைதளத்திற்கு செல்லவும்.
ஹோம் பக்கத்தில் உள்ள 'Link Aadhar'-ஐ கிளிக் செய்யவும்.
அடுத்த பக்கத்தில், பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை பதிவிடவும்.
மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ நிரப்பவும்.
முந்தைய இணைப்பு கெடு தேதியை மிஸ் செய்தவர்களுக்கு ரூ.1,000 அபராதம் கேட்கும். அதை இ-பே மூலம் கட்டவும்.
அடுத்ததாக, 'Submit' கொடுக்கவும்.
அடுத்த 3 - 5 நாள்களில் உங்களது ஆதார் - பான் இணைப்பு வருமான வரி இணையதளத்தில் அப்டேட் ஆகிவிடும்.

ஏற்கெனவே உங்களது பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டதா?
வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும்.
மேலே சொன்ன நடைமுறை மூலம் அபராதம் கட்டி, பதிவு செய்யவும்.
அடுத்த 30 நாள்களுக்குள் பான் கார்டு செயல்பாட்டிற்கு வந்துவிடும்.
உங்கள் ஆதார், பான் கார்டு இணைந்திருக்கிறதா எப்படி செக் செய்வது?
வருமான வரி வலைதளத்திற்குள் சென்று கொள்ளவும்.
'Link Aadhar Status'-ஐ கிளிக் செய்யவும்.
அடுத்த பக்கத்தில், ஆதார் எண் மற்றும் பான் எண்ணை பதிவிட்டு 'View Link Aadhar Status' கொடுக்கவும்.
இப்போது ஆதார், பான் இணைந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும்.

















