செய்திகள் :

சாத்தூர்: அரசு அலுவலருக்குப் பினாமியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த நபர் - எம்.எல்.ஏ ஆய்வில் அம்பலம்!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகள் குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருகைப் பதிவேடு குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக மேனேஜரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அரசு அலுவலர் அல்லாத சிவகாசி அருகே உள்ள விஸ்வநாதம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அரசு ஊழியராக நியமனம் இல்லாமல் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக பாண்டி பணியாற்றிய விவரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார்.

எம்எல்ஏ ஆய்வு

"பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலரின் இடத்தில் அரசு அலுவலர் அல்லாத நபர் எவ்வாறு பணிபுரிய முடியும்? இதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் எப்படி ஒத்துழைக்க முடியும்?" என்று சட்டமன்ற உறுப்பினர் கடும் கேள்விகளை எழுப்பினார். விசாரணையில், பாண்டி என்பவர் ஊராட்சி ஒன்றிய செயற்பொறியாளருக்கு உதவியாகப் பணிபுரிந்து வருவதாகவும், அவரே இதுவரை ஊதியம் தருவதாகவும் தகவல் வெளியானது. அதாவது, அரசு அலுவலர் ஒருவருக்குப் பினாமியாக இந்த நபர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

எம்எல்ஏ ஆய்வு

இச்சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் மரு.ஏ.ஆர்.ஆர். ரகுராமன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். "இது அரசு நிர்வாகத்தில் நடக்கக்கூடாத கடுமையான முறைகேடு. ஒரு நியமன ஆணை கூட இல்லாமல் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருப்பது எப்படி சாத்தியம்? இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியராக இல்லாத நபர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 31-ம் தேதி தான் கெடு: பான் கார்டு ரத்தாகலாம்; உங்கள் பான் கார்டை செக் செய்வது எப்படி?| How to

வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தான் டைம். அதற்குள் பான்‌ கார்டை, ஆதார் கார்டு உடன்‌ இணைத்துவிடுங்கள். இல்லையென்றால், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும்.பான் - ஆ... மேலும் பார்க்க

"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" - செங்கோட்டையன்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.அந்த வரிசை... மேலும் பார்க்க

``முருங்கை இலை சாறு டு தென்னிந்திய ரசம்'' - ரஷ்ய அதிபர் புதினுக்கு விருந்து வைத்த குடியரசுத் தலைவர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். நேற்று இந்தியா வந்த புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.ராணுவ ... மேலும் பார்க்க

அமெரிக்காவை அதிரவைத்த பேருந்து புறக்கணிப்பு போராட்டம்! 70 ஆண்டுகள் கடந்தும் கவனம்பெறும் `டிசம்பர் 5’

பேருந்துகள் என்பது வெறும் போக்குவரத்து வாகனம் மட்டுமல்ல. நவீன சமுதாயத்தின் கட்டமைப்பு. பேருந்துகள் என்பவை பலரது வாழ்வாதாரத்திற்கான கடத்து சங்கிலி, சாமானிய மக்களை வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல... மேலும் பார்க்க

மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்!

திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் வழக்கம்போல இந்த ஆண்டும் ஏற்றப்பட்டது. எனினும் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்... மேலும் பார்க்க