"வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்"- விஜய்யை நேரில் சந்தித்தது குறி...
UNAVU EXPO 2026: 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்; 500க்கும் மேற்பட்ட பிராண்டுகள் - வெளியான அறிவிப்பு!
84 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் (TNHA), 1,00,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 5,00,000-க்கும் அதிகமான வணிக நிறுவனங்களையும் (5 நட்சத்திரம் முதல் பட்ஜெட் ஓட்டல்கள் வரை) அனைத்து வகை உணவகங்கள், பேக்கரிகள், கஃபேக்கள் மற்றும் QSR-களை பிரதிநிதித்துவப்படுத்தி, தென் இந்தியாவின் உணவு மற்றும் விருந்தோம்பல் துறைக்கான மிகப்பெரிய B2B வணிக தளமான UNAVU EXPO 2026-ஐஅறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FHRAI) மற்றும் தென் இந்திய ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கம் (SIHRA) ஆகியவற்றின் ஆதரவுடன், சென்னை நகரில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரு. M. வெங்கடசுப்பு, தலைவர்; திரு. D. சீனிவாசன் – கௌரவ தலைவர்; திரு. M. ரவி – கௌரவ தலைவர்; திரு. K. T. சீனிவாச ராஜா – கௌரவ தலைவர்; திரு. R. சீனிவாசன் – செயலாளர், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்; மற்றும் திரு. பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் – இயக்குநர், Synergy Exposures & Events India Pvt. Ltd. ஆகியோர் கலந்து கொண்டனர்.

2026 அக்டோபர் 1 முதல் 3 வரை சென்னை வர்த்தக மையம் (Chennai Trade Centre) வளாகத்தில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன. மேலும் இந்தியா முழுவதும் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று நாள் B2B வணிக நிகழ்வான இந்த UNAVU EXPO 2026-ல் ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், கஃபேக்கள் உள்ளிட்ட துறைகளின் பங்குதாரர்கள் ஒன்று கூடி தொழில் போக்குகள், கொள்கைகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
உணவகத் துறையின் முன்னோடியான டாக்டர் K. தாமோதரசுவாமி நாயுடு அவர்கள், தனது தொலைநோக்கு பார்வையால் தமிழக உணவகத் துறையை மாற்றியமைத்தவர். ஸ்ரீ அன்னபூர்ணா – ஸ்ரீ கவுரிசங்கர் பிராண்டை உருவாக்கி தரம் மற்றும் சுத்தத்தில் புதிய அளவுகோல்கள் அமைத்தார். பல புதுமைகளை அறிமுகப்படுத்திய அவரை நினைவுகூர்ந்து, UNAVU EXPO 2026-இல் அக்டோபர் 3 ஆம் தேதி “உணவக தினம்” (Unavaga Dhinam) ஆகக் கொண்டாடப்படுகிறது.


















