”ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிப்பு புகார்” - அதிமுக பிரமுகர் உட்பட 12 ப...
Vedan: இரா.முத்தரசன் நடிக்கும் படம்; இளையராஜா இசையில் பாடும் ராப் பாடகர் வேடன்! - வெளியான அறிவிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிக்கும் 'அரிசி' படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தது.
இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இப்படத்தை இயக்கியுள்ள இப்படம் உணவுக்குப் பின்னுள்ள அரசியல் குறித்தும், விவசாயிகள் சந்திக்கும் போராட்டங்களை இத்திரைப்படம் மையப்படுத்துகிறதாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில்தான் வேடன் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
சமீப நாட்களாக மலையாள சுயாதீன இசைத்துறையின் சென்ஷேஷனாக இருந்து வருகிறார் வேடன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பைசன்' படத்தின் மூலம் தமிழில் அவரின் முதல் பாடலைப் பாடினார்.

தற்போது இளையராஜா இசையிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் வேடன்.
பாடலாசிரியர் மற்றும் ராப் பாடகர் அறிவுடன் இணைந்து இப்பாடலை அவர் பாடவிருப்பதாகவும் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்துதான் 'பைசன்' படத்தின் 'ரெக்க ரெக்க' பாடலைப் பாடியிருந்தனர்.





















