செய்திகள் :

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

post image

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, ​​சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபக் சோனியை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாகத் தெரிகிறது. இதனால், சரியான நேரத்துக்கு அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை.

ஆம்புலன்ஸ்

இது தொடர்பாக தீபக் சோனியின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``விபத்து நடந்த உடனேயே சோனி தீபக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை போபாலுக்குக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்த நிலையில், அவரை போபாலுக்குக் கொண்டு செல்ல ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

தாமதமாகவே அவரை போபால் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். ஆனால், அவர் சிகிச்சையின்போது உயிரிழந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு விவசாய நிகழ்ச்சி தொடர்பான "விஐபி பணிகளுக்காகவே" மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது." எனக் குற்றம்சாட்டினர்.

அனைத்து ஆம்புலன்ஸ்களும் விஐபி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும், உடனடியாக மாற்று ஏற்பாடு எதையும் செய்ய இயலவில்லை என்றும் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் யஷ்பால் பாலியன் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோகன் யாதவ்
மோகன் யாதவ்

இந்தச் சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்துப் கருத்து தெரிவித்த, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இணை அமைச்சர் நரேந்திர படேல், ``உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் எனது இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மருத்துவமனை நிர்வாகம் சார்ந்தவர்களோ, ஆம்புலன்ஸ் சேவை சார்ந்தவர்களோ - யார் தரப்பில் அலட்சியம் இருந்தது என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றத்தைத் தவிர வேறு பிரச்னையே இல்லையா?' - தீப விவகாரத்தில் காட்டமான நீதிபதிகள்

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், `திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்து மக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள், ரம்ஜான் அன்று இஸ்லாமியர்கள் மலை மேலே ச... மேலும் பார்க்க

`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு

``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசா... மேலும் பார்க்க

'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்...' - அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

'தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்' என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

'நோ' Money, 'நோ' UPI: இனி Fastag தான் நெடுஞ்சாலைகளில் கட்டாயம்; 10-ம் தேதிக்கு மேல் இதை மீறினால்?

நெடுஞ்சாலைகளில் டோல் கேட்கள் டிஜிட்டல் மயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் பலரிடம் ஃபாஸ்ட் டேக் இருப்பதில்லை. அதனால், அவர்கள் டோல் கேட்டுகளில் பணமாகவும், யு.பி.ஐ-யிலும் பேமென்ட் செய்து வருகின... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் தொடரும் ஊடுருவல்; பாம்பு, முதலைகளைப் பயன்படுத்தப்போகும் எல்லைப் பாதுகாப்புப் படை

பங்களாதேஷில் இருந்து அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஊடுருவல்காரர்கள் பிரச்னை மே... மேலும் பார்க்க