திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
`அமெரிக்க பேச்சுவார்த்தையில் இந்தியா அவசரம் காட்டவில்லை' - காரணம் சொல்லும் வர்த்தக செயலாளர்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா இந்தியாவின் மீது முதலில் 25 சதவிகித வரி விதித்திருந்தது. பின்னர், இந்தியா ரஷ்யா உடன் வர்த்தகம் செய்கிறது என்று கூடுதல் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆக, தற்போது இந்தியா மீது 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியா ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுமையை இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரிசெய்யும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது என்பதை FICCI ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
"இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆனால், எந்தவொரு பேச்சுவார்த்தையும் இந்த நாளுக்குள் முடிவுக்கு வருமென்று இறுதி நாளை கூறமுடியாது. காரணம், ஏதாவது ஒரு தரப்பில் திருப்தி ஏற்படவில்லை என்றாலும், அந்தப் பேச்சுவார்த்தை முடிவை எட்டாது.
இரு பேச்சுவார்த்தைகள்
தற்போதைய உலகளாவிய வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதில் ஒன்று தான், அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி.
இதனால், இந்தியா மற்றும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியை நீக்கும் உடனடி கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நம்முடைய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மூலம் பரஸ்பர வரியை முழுமையாக நீக்கும் வழியை பார்க்க வேண்டும். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
காரணம், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இதுபோன்ற பல்வேறு அம்சங்களில் பணிபுரிந்து வருவதால், அதில் அவசரம் காட்டவில்லை" என்று கூறியிருக்கிறார்.













