செய்திகள் :

"இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்" - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?

post image

இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்து இருந்து வருகிறது.

இப்படி இந்தியா மீது மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகள் மீது வரி விதித்துள்ளார். இந்த வரிக்கு எதிராக தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.

வரி
வரி

என்ன குரல்?

டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்ப் அவசர சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள வரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இந்த வரிகளால் அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க நுகர்வோர்கள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏன்?

இந்த மசோதாவில் குறிப்பாக இந்தியா குறித்து பேசியுள்ளனர். வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற மாகாணங்கள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தொடர்பு உடையவை. இந்த வரியினால் அந்த மாகாண மக்கள் விலைவாசி உயர்வு தொடங்கி பலவற்றில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் : `நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுத் தீர்ப்பளிக்கவில்லை.!’ - எஸ்.ஜி.சூர்யா | களம் 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது’... மேலும் பார்க்க