பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
``கருப்பா இருக்காருன்னு எங்க திருமணத் தருணத்தில் கேலி'' - ட்ரோல் செய்யப்பட்ட புதுமண தம்பதி வேதனை
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷப் ராஜ்புத் என்பவர் சோனாலி சௌக்சே என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில வாரங்களிலேயே வைரலானது.
பலரும் ரிஷப்பின் கருமையான தோல் நிறத்தைக் குறிப்பிட்டு கேலி செய்தும், சோனாலி பணத்திற்காகவும் தான் ரிஷப்பைத் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி ஊடகத்திற்குப் பேட்டியளித்த இந்தத் தம்பதி, தங்களின் வேதனையையும் விளக்கத்தையும் பகிர்ந்துள்ளனர்.

"நாங்கள் 2014ஆம் ஆண்டு கல்லூரியில் ஒன்றாக படித்தபோது சந்தித்தோம். இது வெறும் 30 வினாடி வீடியோவைப் பார்த்து உருவான பந்தம் அல்ல, 11 ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய காதல் உறவு. தங்கள் திருமணத் தருணம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
சமூக வலைதளங்களில் என் குடும்பத்தையும் சேர்த்துத் தாக்கிப் பேசியது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. யாருக்கும் இன்னொருவரின் குடும்பத்தைக் காயப்படுத்த உரிமையில்லை" என்று அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.
விமர்சனங்களுக்குப் பதிலளித்த சோனாலி, "என்னை 'கோல்ட் டிக்கர்' என்று அழைப்பதும், என் கணவரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதும் எனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் பலருக்கும் வெவ்வேறு தோல் நிறங்கள் உள்ளன.
ஆனால் இன்னும் வெள்ளையாக இருப்பதுதான் சிறந்தது என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. ஒருவரை அவரின் நிறத்தை வைத்து மட்டும் நல்லவர், கெட்டவர் என்று மதிப்பிடுவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தம்பதியின் புகைப்படங்கள் கடந்த ஒரு வாரமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

















