செய்திகள் :

காங்கிரஸ்: "அரசியல் சக்தியாக மாறிவிட்டார் விஜய்.!"- மீண்டும் பிரவீன் சக்ரவர்த்தி

post image

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

காங்கிரஸ் - திமுக
காங்கிரஸ் - திமுக

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஜன. 7) காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 60 வருஷமாக ஆட்சியில் இருந்தது இல்லை.

அதிக சீட், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. கூட்டணியை பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம். அதில் பிரச்னை இல்லை. ஆனால் இறுதி முடிவை தலைமை தான் எடுக்கும். விஜய்யை சந்தித்தேன். அவ்வளவு தான். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

அரசியல் சக்தியாக மாறிவிட்டார் விஜய். அதனை யாரும் மறுக்க முடியாது" என்று பேசியிருக்கிறார்.

ஒருபக்கம் அதிமுக - பாமக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸில் நிர்வாகிகள் இருவேறு நிலைப்பாட்டில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" - திருமாவளவன்

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்த... மேலும் பார்க்க

மும்பை: விலகும் விசுவாசிகள்: நெருக்கடியில் உத்தவ் வாரிசு; கோட்டையை தக்கவைப்பாரா ஆதித்ய தாக்கரே?!

மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் ராஜ் த... மேலும் பார்க்க

பாமக: `ஏன் அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை செல்லாது?' - ராமதாஸ் வழக்கறிஞர் விளக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அறிவித்த கூட்டணி செல்லுமா என்பது குறித்து ராமதாஸின் வழக்கறிஞர் அருள் பேசியதாவது..."மருத்துவர் ஐயா (ராமதாஸ்) பா.ம.க-வின் தலைவராக இ... மேலும் பார்க்க

Vijay: "ஜன நாயகன் படத்திற்கு அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறாரா?" - செல்லூர் ராஜூ விளக்கம்

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, "முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், பாஜக, தன் கட்டுப்பாட்டில... மேலும் பார்க்க

திற்பரப்பில் பீதியைக் கிளப்பும் முதலை; மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கும் எம்.எல்.ஏ!

இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. ஆண்டின் அனைத்து நாள்களிலும் தண்ணீர் கொட்டும் என்பதால் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சே... மேலும் பார்க்க

உங்கள் கனவைச் சொல்லுங்கள்: "மக்களின் கனவைக் கேட்டதற்கே ஏன் அலறுகிறார்?"- EPSஐ சாடும் அமைச்சர் ரகுபதி

தமிழக அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், "அடிமைக் கனவோடு வாழும் பழனிசாமி 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்த... மேலும் பார்க்க