``மகள், கணவரை கவனிப்பதில் பிஸி, படங்களில் நடிக்கவில்லை என்பதற்காக கவலையில்லை'' -...
``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
அதில் புதின் பேசியதாவது,
"இந்தியாவும், ரஷ்யாவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது. இதற்கு இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி நடக்கும் தொலைபேசி அழைப்புகளும், இருதரப்பு உறவின் தொடர் கண்காணிப்புகளும் முக்கியச் சாட்சி.
கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயும் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் அளவிற்கு (64 பில்லியன் டாலர்கள்) வர்த்தகம் அதிகரித்துள்ளது. அது இந்த ஆண்டும் வலுவாக தொடர்ந்து வருகிறது.
இதில் சுமார் 96 சதவிகித வர்த்தகம் இருநாடுகளின் தேசிய நாணயங்கள் மூலமே நடந்துள்ளது.

கூடங்குளம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீதம் உள்ள உலைகளை கட்டி முடிக்க இந்தியாவிற்கு ரஷ்யா உதவும்.
அணு மின் துறை தாண்டி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றிலும் இந்தியா, ரஷ்யா இணைந்து செயல்படும்.
ரஷ்யா இந்தியாவின் நம்பகமான எண்ணெய், எரிவாயு சப்ளையராக தொடரும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து எரிசக்தி கிடைப்பதை ரஷ்யா உறுதி செய்யும்" என்றார் புதின்.
















