BB Tamil 9: Day 61: பாரு பற்ற வைத்த நெருப்பு; பொங்கிய ஆதிரை; `நான் அப்படி ஆளு இல...
``மகள், கணவரை கவனிப்பதில் பிஸி, படங்களில் நடிக்கவில்லை என்பதற்காக கவலையில்லை'' - ஐஸ்வர்யா ராய்
ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தனது குடும்பம், குழந்தை என இருக்கிறார் ஆனால் பொதுநிகழ்ச்சிகள், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார். அவர் அங்கு பிரபல ஹாலிவுட் நடிகையுடன் உரையாடியபோது பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட் நடிகையுடன் பேசும்போது, “நான் இப்போது படங்களில் நடிக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை.
எனக்கு திரைப்படங்களை விட எனது தனிப்பட்ட வாழ்க்கை தான் முக்கியம். நான் இப்போது எனது மகள் ஆராத்யா மற்றும் கணவர் அபிஷேக்கை கவனித்துக்கொள்வதில் பிஸியாக இருக்கிறேன்.
அதனால்தான் படங்களில் நடிப்பதில்லை, அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இப்போதும் எனக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
நான் திரைப்படத்துறையில் நுழைந்த போது, என்னை யாரும் திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்தவில்லை. நானாகத்தான் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். நான் எப்போதும் பாதுகாப்பற்றவளாக உணர்ந்ததில்லை. நான் யார் என்பதற்கான உண்மையான அம்சம் இதுதான். பாதுகாப்பற்ற தன்மை உங்களை ஆட்டிவைக்கக்கூடாது.

நான் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை. சமூக வலைத்தளத்தில் ஒரு கணக்கே இருக்கிறது. அதையும் நான் அதிகமாக பயன்படுத்துவதில்லை. உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டது தற்செயலாக நடந்த ஒன்று.
அதனை நான் உலக அழகிப் போட்டியாக பார்க்கவில்லை; சர்வதேச அளவில் பெண்களை பிரதிநிதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவே பார்த்தேன்,” என்று தெரிவித்தார்.
அதோடு, தான் நடித்த படங்கள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இத்திரைப்படத் திருவிழாவில் ஐஸ்வர்யா ராய் கருப்பு நிற ஆடையில் வந்து அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தினார். அதோடு, அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார்.

















