செய்திகள் :

BB Tamil 9: Day 61: பாரு பற்ற வைத்த நெருப்பு; பொங்கிய ஆதிரை; `நான் அப்படி ஆளு இல்ல' - கதறிய விக்ரம்

post image

இந்த சீசன் அறுபது நாட்களைக் கடந்த நிலையில் இறுதி வரைக்கும் செல்லக்கூடியவர்களாக யார் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. விக்ரம், சுபிக்ஷா என்று இரண்டு பெயர்கள்தான் தோன்றுகின்றன. 

மார்னிங் ஆக்டிவிட்டி. விஜய் சேதுபதி டைட்டில் வின்னரை அறிவிக்கும் மேடையில் அவரது இடது மற்றும் வலது பக்கத்தில் நிற்கப் போவது யார் யார் என்பதை போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். 

அனைவரும் தன்னம்பிக்கையோடு தன்னையே சொல்லிக் கொண்டார்கள். கூட இருப்பவராக விக்ரமின் பெயரை அரோ மற்றும் கனி ஆகியோர் சொன்னார்கள். வினோத்திற்கு நிறைய வாக்குகள். கம்மு, வியானா, பாரு ஆகியோர் சொன்னார்கள். 

பாருவின் பெயரைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார் விக்ரம். இது பாருவிற்கே சர்ப்ரைஸ்தான். தனது எதிர்முனை துருவமாக பாருவை விக்ரம் பார்ப்பது ஓகேதான் என்றாலும் ரன்னர்அப் பாரு என்பது  ஓவர்தான். இதற்குப் போய் ஐடியாலாஜி என்றெல்லாம் மிகையான வார்த்தையைப் பயன்படுத்தினார் விக்ரம். 

வினோத்திற்கு அதிக வாக்குகள் வந்ததால், தனது முறை வரும் போது ஆதிரை கடுமையாக ஆட்சேபித்தார். “எப்படி அவர் பேரைச் சொல்றீங்கன்னு புரியல. அவர் மத்தவங்களை கடுமையா கிண்டல் பண்றாரு.. திவாகர் வெளியே போனதுக்கு அவர்தான் காரணம். திவாகர் கூடவே போய் அவரைக் கிண்டல் பண்ணி டேமேஜ் பண்ணாரு. வினோத் காமெடி ஓகே. ஆனா டைட்டில் வின்னரா?” என்று பொங்கினார் ஆதிரை. 

“என்னை ஏம்மா டார்கெட் பண்றே.? என்று இதற்கு மறுப்பு தெரிவித்த வினோத் “இப்ப டாஸ்க் நடந்துட்டு இருக்கு. உன் கருத்தை அப்புறம் சொல்லு” என்றது சரியான பாயிண்ட். இதையே சிலர் வற்புறுத்தினார்கள். ‘டைட்டில் வின்னர் யார்’ என்பதுதான் டாஸ்க். யார் இல்லை என்பதை கூறும் இடம் இதுவல்ல. இந்த நோக்கில் ஆதிரை பொங்கியது தவறு. 


“திவாகர் போனதுக்கு நான் காரணம் இல்ல. நீங்க வீடியோவைப் பாருங்க. அவர் வெளியே போன போது நான்தான் அழுதேன். ‘நான் ஹீரோ மெட்டீரியல்.. என் கூட ஏன் வந்து நிக்கறே..ன்னு அவர்தான் என் கூட நிறைய சண்டை போட்டிருக்கார்” என்று மறுப்பு தெரிவித்தார் வினோத். 

ஆனால் இதில் உண்மையில்லை. திவாகர் ரீல்ஸ் போடுவது உள்ளிட்ட பல சமயங்களில் வினோத் அவரை நோண்டிக் கொண்டேயிருந்தார் என்பதைப் பார்த்தோம். திவாகரும் இதற்கு சளைப்பில்லாமல் சண்டை போடும் ஆசாமியாகவே இருந்தார். அடிக்கடி ரீல்ஸ் போடுவதும், பாருவின் சகவாசமும்தான் திவாகர் வெளியே போனதற்கு முக்கிய காரணம். 

“ஆதிரை மனசுல இருக்கறதை சொல்லிட்டுப் போகட்டுமே.. ரெண்டு நிமிஷம் ஆகப் போவுதா?” என்று சிலர் ஆதரவு தெரிவித்தார்கள். அரோராவும் இது தொடர்பாக பேச, “நீ ஜால்ரா அடிக்காத” என்று வினோத் கடுமையாக சொல்ல, அரோவிற்கு கோபம் வந்தது. 

இந்த டாஸ்க் முடிந்ததும் வியானாவிற்கும் விக்ரமிற்கும் இடையே ஒரு பஞ்சாயத்து எழுந்தது. ``வினோத் மட்டுமில்லை. விக்ரம் கூட காமெடின்ற பேர்ல நிறைய கிண்டல்கள் செய்கிறார். சுட்டிக் காட்டினாலும் நிறுத்துவதில்லை. இதை மத்தவங்க நார்மலைஸ் பண்ணிடாதீங்க” என்பது வியானாவின் கோபம். 

“ஹலோ.. நான் அப்படிப்பட்ட ஆளு இல்லை. ஒருத்தர் சொல்லிட்டா அந்த விஷயத்தை வெச்சு நான் கிண்டல் பண்ணவே மாட்டேன். என் கேரக்ட்டர் அப்படி. மத்தபடி உரிமைல ஏதாவது கிண்டல் பண்ணியிருப்பேன்” என்று விளக்கம் தந்தார் விக்ரம். 

என்றாலும் விக்ரமின் கொதிப்பு அடங்கவில்லை. மறுபடியும் வியானாவை அழைத்து “அப்படி என்ன நான் தப்பா பேசிட்டேன். உதாரணம் சொல்லு” என்று கேட்க, வியானா சொன்ன இரண்டு சம்பவங்களுமே மொக்கையான உதாரணங்களாக இருந்தன. 

“பிக் பாஸ் கூப்பிடறாரு. வந்தா வாங்க.. வராட்டி சாவுங்க’ன்னு சொன்னீங்க. அது தப்பில்லையா?” என்று வீக்கான பாயிண்டை முதலில் எடுத்து வைத்தார் வியானா. “தப்புத்தாம்மா.. ஆனா அப்பத்திய சூழல் அப்படி. பிக் பாஸ் கிட்ட உள்ளே போய் திட்டு வாங்கினவன் நானு. அவர் பேச்சையே கேக்காம சண்டை போடறாங்க. அந்தக் கோபத்துல சொல்லிட்டேன். மனுஷன்னா இயல்புல இருந்து தடுமார்றது சகஜம்தானே?” என்று விக்ரம் சொன்னதில் நியாயம் இருந்தது. 

பிக் பாஸ் குறுக்கிட்டும் கூட சந்தைக் கடை இரைச்சலை இவர்கள் நிறுத்தாததில் பார்வையாள்களுக்கே எரிச்சல் வந்திருக்கும். அந்தக் கோபத்தில் ‘go to hell’ என்று பொத்தாம் பொதுவாகச் சாென்னது பெரிய குற்றம் கிடையாது. 

வியானா வைத்த அடுத்த குற்றச்சாட்டும் புஸ்ஸானது. பெண்கள் சமாச்சார உடையை கொண்டு வந்து விக்ரம் நடுவீட்டில் வைத்தது. உண்மையில் இந்தச் சம்பவத்திற்கு மூல காரணம் பாருதான். “யாரோ துணிய துவைச்சிட்டு அப்படியே வெச்சிட்டுப் போயிருக்காங்க. என்னன்னு பாருங்க” என்று விக்ரமிடம் போட்டுக் கொடுத்தார் பாரு. 

பின்னர் தல ரம்யா சொன்னபடி அந்தத் துணிகளை கொண்டு வந்து விக்ரம் நடுவீட்டில் வைத்து விட்டார். இது பெண்கள் சமாச்சாரம் ஆயிற்றே என்று விக்ரம் தயங்கி செய்யாமல் இருந்திருக்க வேண்டும். “சுயபுத்தியாவது இருந்திருக்கணும்” என்று பாரு சொன்னது சரியானது. 

ஆனால் அதிகாரம் சொல்லி விட்டால் அதைத் தட்டாமல் செய்யும் விக்ரம், தன் இயல்புப்படி வைத்து விட்டார். “என் துணின்னு தெரிஞ்சுதானே கொண்டு வந்தீங்க?” என்று வியானா கேட்டவுடன் விக்ரம் உடைந்து விட்டார். “கைய விட்டுப் பார்த்தியான்னு யாரோ கமெண்ட் பண்ணாங்க.. அதைக் கூட நீங்க தட்டிக் கேட்கலை” என்பது வியானாவின் புகார். 

“ஏம்மா.. நீ கேட்ட முதல் கேள்வியிலேயே நான் உடைஞ்சுட்டேன். இடிஞ்சு போயிட்டேன். அப்புறம் நடந்தது எதுவுமே என் புத்திக்கு உறைக்கலை. நீ என் தங்கச்சி மாதிரி. உனக்கா நான் அப்படிச் செய்வேன். அப்படி கேள்வி கேட்டதே தப்புதான்” என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்து சுயபச்சாதாபத்தில் கோவென்று அழுத விக்ரமை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். 

விக்ரம் அழுததால் தானும் அழுதபடி அங்கிருந்து விலகினார் வியானா. பாத்ரூம் ஏரியாவில் அழுத அவரை சான்ட்ராவும் கம்முவும் சமாதானப்படுத்தியதோடு விக்ரமிற்கு எதிராகவும் தூபம் போட்டார்கள். பாருவும் அங்கு வந்து வியானா அழுவதை சுவாரசியமாக வேடிக்கை பார்த்தார். (நீ பற்ற வைத்த நெருப்பு..!)

“இப்படியொரு கேள்வியை கேட்டுட்டு போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்?” என்று விக்ரம் கோபமாக, “ஒரு ஆர்க்யூமெண்ட்ல பாயிண்ட் இல்லைன்னா. இப்படித்தான் அவ போயிடுவா. தன்னை ஒரு விக்டிம் மாதிரி காண்பிச்சுக்குவா” என்றார் அரோ. 

தனது கோள் மூட்டுதலை மேலும் தொடர்ந்தார் பாரு. வினோத்திற்கும் அரோவிற்கும் டாஸ்க்கின் போது எழுந்த மோதலையடுத்து “யாரு என்ன கேம் ஆடறாங்கன்னு புரிஞ்சுக்கணும். நல்லா கவனிக்கணும்.. புரியுதா?” என்று வினோத்திற்கு பாரு சாம்பிராணி போட,

அருகில் இருந்த திவ்யாவிற்கே அது அநீதியாகப் பட்டது. “நீ பண்றது நூறு சதவீதம் தப்பு பாரு.. இது சரியில்ல” என்று ஆட்சேபித்த திவ்யா, அரோவையும் கூப்பிட்டு வந்து இதில் இணைத்து விட்டார். 

இப்போது சண்டை பாருவிற்கும் அரோவிற்குமாக மாறியது. “நான் பொதுவாத்தான் சொன்னேன்.. உன்னை சொல்லல” என்று பாரு எஸ்கேப் ஆக முயல “உன்னைப் பத்தி தெரியாதா.. எல்லாத்தையுமே ஜாடையா சொல்ற மாதிரிதான் சொல்லுவே” என்று பாருவை யூடர்ன் போட்டு எகிறி அடித்தார் அரோ. 

சபையைக் கூட்டிய பிக் பாஸ் “இந்த வாரம் முழுவதும் சிறப்பாகப் பங்கேற்றவர்களிடமிருந்து ஆறு சிறந்தவர்களைத் தோ்ந்தெடுக்க வேண்டும். மீதமுள்ள பத்து நபர்களும் ஒட்டுமொத்தமாக சிறைக்கு செல்ல வேண்டும்” என்று வெடிகுண்டை ஆரம்பத்திலேயே வீசினார். 

ஒவ்வொருவரும் வந்து தங்கள் தேர்வைச் சொல்ல, இறுதியில் சான்ட்ரா, அரோரா, விக்ரம், கனி, பிரஜன், சபரி என்று ஆறு நபர்கள் தேர்வானார்கள். இந்த வரிசையில் சான்ட்ரா, அரோ, பிரஜன், சபரியெல்லாம் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை. 

பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக  பத்து நபர்கள் சிறையில்.!

பத்து வொர்ஸ்ட் பர்ஃபார்மர்களும் அதற்கான காரணத்தை தாங்களே போர்டில் எழுதி கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற தண்டனையை பிக் பாஸ் தந்தார்.

‘அணி ஒற்றுமை இல்லை’ என்பது வினோத்தின் காரணம்.

‘இது மத்தவங்க கருத்து’ என்பது ஆதிரையின் காரணம்.

‘எனக்கு காரெக்டரே புரியலை’ என்று ஆச்சரியப்படுத்தினார் அமித். (ச்சே.. அந்த இடத்துல நான் இருந்திருக்கணும். கர்ணன் சிவாஜியாவே மாறியிருப்பேன் - திவாகர்).

“எனக்கு உடம்பு சரியில்ல. கேரக்டரும் புரியல” என்றார் ரம்யா. (இவர் தேவயானி காரெக்டர் செய்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?!) 

“நான் என்னுடைய பெஸ்ட்-ஐ கொடுத்தேன். என்னால இதை ஏத்துக்க முடியாது” என்று கோபமடைந்த திவ்யா, சிறைக்குள் சென்ற பிறகும் கோபம் தீராமல் கத்தினார்.

“எனக்கு தரப்பட்ட கேரக்டர் கிளாசிக்கல் டான்ஸர் என்றாலும் டான்ஸை தப்பா ஆடிடக்கூடாதுன்னு ஆடலை” என்று திவ்யா சொன்ன காரணம் வினோதமானது.

மத்தவங்க எல்லாம் சரியாவா பண்ணாங்க?! “நீங்க எல்லோருமே பாரபட்சமா ஓட்டு போட்டீங்க..” என்று மற்றவர்களின் மீது பாய்ந்தார் திவ்யா. 

ஆதிரை பற்றி தவறாக சொன்ன கமெண்ட் காரணமாக, அவருடன் முதலில் மல்லுக்கட்டிய கம்மு, பிறகு “வேணும்னா கால்ல விழறேன். போதுமா?” என்று திடீரென காலில் விழுந்தார். (இந்த சீசனில் இது மூன்றாவது சம்பவம்!). பிறகு கம்முவிற்கும் அரோவிற்கும் இடையில் மோதல். 

“யார்.. அந்த ஆதிரை.. அவ சொன்னான்னு என் கிட்ட வந்து பேசற… துஷார் வெளியே போனதுக்கு நீதான் காரணம்ன்னு நான் சொல்லட்டுமா? இப்ப ஓப்பனா சொல்றேன்.. அதுதான் காரணம்.. நீதான் அவன் கிட்ட பேசிப் பேசி வெளியே அனுப்பிச்சிட்ட” என்று கம்மு உடைத்துப் போட தனிமையில் சென்று அழுதார் அரோ. 

ஆட்டு மந்தை மாதிரி சிறைக்குள் ஆட்கள் குழுமியிருந்தார்கள். ‘தங்களுக்குள் கூடிப் பேசி ஒருவரை வெளியே அனுப்பலாம்” என்று விதியை தளர்த்தினார் பிக் பாஸ். இதில் சண்டை மூளும் என்பது அவர் எதிர்பார்ப்பு போல. ஆனால் அப்படி நிகழவில்லை. வாக்கெடுப்பின் மூலம் ஒவ்வொருவராக வெளியே வர இறுதியில் மிஞ்சியவர்கள் ஆதிரை, வினோத் மற்றும் திவ்யா. மற்றவர்கள் தனக்காக வாக்கு போட்டுக் கொண்ட நிலையில் வினோத் அதைச் செய்யாமல் இருந்தது சிறப்பு. 

தன்னை வொர்ஸ்ட் பொ்ஃபார்மராக தேர்ந்தெடுத்ததோடு, வெளியில் அனுப்பும் தேர்வையும் செய்யாததால் திவ்யாவின் கோபம் கூடியது. “நான் டாஸ்க்கும் பண்ணேன். உங்களுக்கு வடிச்சும் கொட்டினேன். எல்லாத்துக்கும் திவ்யா தேவை. ஆனா என்னை செலக்ட் பண்ண மாட்டீங்கள்ல.. அடுத்த வாரம் என்னை நாமினேட் பண்ணிடுங்க. வெளியே போறேன்” என்று கொதித்துக் கொண்டிருந்தார் திவ்யா. 

‘அவங்க கத்தட்டும்.. நாம நெய் விளம்பரம் செய்யணும். எல்லாம் அங்கே வாங்க.. என் பொழப்ப பார்க்கணும்’ என்று உத்தரவிட்டார் பிக் பாஸ். 

இன்று விசாரணை நாள். நெக்லஸ் டாஸ்க்கில் சொதப்பியது முதல் பாருவின் அட்ராசிட்டி வரை கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. விசே என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். சென்ற வாரமே எச்சரித்தபடி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்குமா?

இறுதிக்கட்டம் வரை செல்லக்கூடிய போட்டியாளர்களாக யாரை நீங்கள் நினைக்கிறீர்கள். கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். 

'மேக்னா'ஸ் ஃபார்ம்: கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை! - இயற்கை விவசாயத்தில் 'பொன்மகள் வந்தாள்' மேக்னா

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் நடித்த மேக்னாவை நினைவிருக்கிறதா? அப்பாவி மருமகளாக வந்து அனைவரின் ஆதரவையும் அள்ளினாரே, அவரேதான். பிறகு 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். ... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 60: முடியாத முக்கோணக் காதல்; பாரு அட்ராசிட்டி - கானா வினோத்தின் முரட்டு சம்பவங்கள்!

வீக்லி டாஸ்க் முடியும் ஒவ்வொரு முறையும் ‘ஹப்பாடா’ என்று போட்டியாளர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அப்படி மகிழ வேண்டியது பார்வையாளர்கள்தான்.‘இப்போதாவது முடிந்து தொலைத்ததே’ என்று நிம்மதிப் பெருமூச்... மேலும் பார்க்க

BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: "வினோத்துக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்குறதை ஏத்துக்கவே முடியாது"- காட்டமான ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா..." - நடிகை ராணி

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம்.''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணு... மேலும் பார்க்க