செய்திகள் :

`சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு' விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது - பின்னணி என்ன?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் திடலில் தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்தில், தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.,  மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  

இதில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பேசும்போது, “இவ்வளவு கேவலமான முதல்வரை  தமிழகம் மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது.

மார்க்கண்டேயன் கைது

இனி வரும் தேர்தல்களில் 5% வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்றுப் போகும்.  பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்  தேர்தலில் தோற்றபோது, அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள். ஆனால் இந்த உலகத்தில், நாட்டில் சட்டமன்றத்தில்  தேடிக் கொண்டிருக்கிறேன் உன் தகப்பனாரை என்று சொல்கிறானே, நான் கேட்கிறேன்.. மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர்(விஜய்), உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?

சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை கூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்?  

நாங்க ஒன்னும் பயந்து ஓடவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார்.  கொத்து புரோட்டா போட போறாராம், உன்னை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.. நீ எவ்வளவு கேவலமாக பேசினாய்?   இன்றைக்கு தமிழகத்தில்  அந்த அன்பு மகளை போன்று, மூன்று வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை உன்னுடைய ஆட்சியில் யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. 

மார்க்கண்டேயன்

வழக்கு போடுவேன், மிரட்டுவேன் எம்எல்ஏ.,விடம் விலைபேசுவேன்  என்கிறான். மானங்கெட்ட பையன், தகுதி இல்லாதவன் தான் இவன் கட்சில இருக்கான்.   அடுத்த நாள் என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை முதல்வருக்கு கிடையாது. அவருடைய அமைச்சர்களுக்கும்  கிடையாது. திருச்செந்தூரில் தரிசனத்திற்கு 2,000 ரூபாய் காசு வாங்கி விட்டதாக ஐயரை பிடிக்கிறான். பழனியில் நூறு கோடி ரூபாய் சொத்தை எழுதிக் கொடுக்கிறாங்க. இப்படிப்பட்ட மானங்கெட்ட அமைச்சர்களை வைத்திருக்கிறார்கள். ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர். நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறாங்க. 150 கோடி ரூபாய் கருப்பு பணம் வாங்கி இருக்காங்க.

10  பைசாவுக்கு பிரிண்ட் அடிக்கிறத 10 கோடிக்கு பணம் சேர்த்து  5,000 கோடி வைத்திருக்கிறான் ஆதவ் அர்ஜுனா. அவரது மாமியாருக்கு 5,500 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.  ஆனா எங்க தலைவர்களிடம் பணம் எப்படி வந்தது, எப்படி வெள்ளை வேஷ்டி கட்டுகிறார் என்று கேட்கின்றனர். போடா விளக்கெண்ண. உன்னால் என்ன செய்ய முடியும்..? எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.

மார்க்கண்டேயன்

எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம்.” எனப் பேசினார்.

மார்க்கண்டேயனின்  இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்த உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டனக் குரல் எழுப்பினர். இந்த நிலையில், த.வெ.கவினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்ட... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் ... மேலும் பார்க்க