செய்திகள் :

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் - லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

post image

 சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தியதில் பிரியங்காவை கொலை செய்தது நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் எனத் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜனை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள்  தெரியவந்தது.

 இதுகுறித்து நம்மிடம் பேசிய மணலி போலீஸார், ``பிரியங்காவை அவரின் தாய்மாமா ராஜாவுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். தாய் மாமாவோடு வாழ பிடிக்காததால் அவரைப் பிரிந்து பிரியங்கா தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். அதன்பிறகு வேலைக்குச் சென்ற இடத்தில் கடலூரைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவரைக் காதலித்து பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். அவரோடு 14 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த பிரியங்காவுக்கு 13 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தச் சமயத்தில்தான் நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜனின் ஆட்டோவில் செல்லும்போது பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன்

பிரியங்காவும் கோவிந்தராஜனும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை பிரியங்காவின் கணவர் செல்வேந்திரன் கண்டித்தார். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிள்ளைகளையும் கணவனையும் விட்டு விட்டு கோவிந்தராஜனுடன் பிரியங்கா ஓடிவிட்டார்.பின்னர் இருவரும் வியாசர்பாடி ஹசிங்போர்டில் உள்ள ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அவர்களோடு பிரியங்காவின் அம்மா வசந்தகுமாரியும் சில மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். அப்போது பிரியங்கா, போனில் நீண்ட நேரம் பேசியதை கவனித்த கோவிந்தராஜன், பிரியங்காவின் நடத்தையில் சந்தேகப்பட்டிருக்கிறார். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடந்த வாரத்தில் வசந்தகுமாரியையும் பிரியங்காவையும் வீட்டை விட்டு துரத்தியிருக்கிறார் கோவிந்தராஜன். அதனால் வசந்தகுமாரி, ராயபுரத்தில் உள்ள தங்கை வீட்டுக்கு வந்துவிட்டார். பிரியங்கா அவரின் தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

கடந்த 30-ம் தேதி பிரியங்காவைத் தேடி ராயபுரத்துக்கு வந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன், வசந்தகுமாரியிடம் உன் மகள் சொன்னால் கேட்க மாட்டாளா, இப்போது யாருடன் இருக்கிறாள். அவளை கொலை செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். அதன்பிறகு பிரியங்காவை போனில் தொடர்பு கொண்டு பேசிய கோவிந்தராஜன், இனிமேல் நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன் என கூறி வியாசர்பாடிக்கு அழைத்திருக்கிறார். அவரின் பேச்சை உண்மையென நம்பிய பிரியங்காவும் அங்கு சென்றார். பின்னர் பிரியங்காவை அழைத்துக் கொண்டு மணலிக்குச் சென்ற கோவிந்தராஜன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பிரியங்காவை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார். இதுதொடர்பான புகாரில் கோவிந்தராஜனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

கொலை
கொலை

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மனைவி பிரியங்கா வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவதை தெரிந்த செல்வேந்திரன், தன்னுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான கடலூருக்குச் சென்றுவிட்டார். பிரியங்காவும் கோவிந்தராஜனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் பிரியாவின் நடத்தையில் கோவிந்தராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் 26.11.2025-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற பிரியங்கா, 30-ம் தேதி வீடு திரும்பியிருக்கிறார். அப்போது பிரியங்காவிடம் நீ வேறு ஒருத்தனுடன் செல்போனில் பேசி வருகிறாய். உன்னை நம்பி நான், என்னுடைய மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு உன்னிடம் வந்தேன் என கூறி அவரை அடித்து உதைத்திருக்கிறார் கோவிந்தராஜன். அதனால் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்காவை சமாதானப்படுத்தி வியாசர்பாடிக்கு வர வழைத்திருக்கிறார் கோவிந்தராஜன்.  பின்னர் 30-ம் தேதி இரவு பிரியாணி, மது வாங்கிக் கொண்டு பிரியங்காவை அழைத்துக் கொண்டு மணலியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்துக்கு கோவிந்தராஜன்  சென்றிருக்கிறார். அங்கு  மதுஅருந்தியபடி பிரியாணி சாப்பிட்ட கோவிந்தராஜன், பிரியங்காவுடன் அங்கேயே செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அதற்கு பிரியங்கா ஒத்துழைக்காததால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன், பிரியங்காவை அசிங்கமாக திட்டியதோடு காலி மதுபாட்டிலை உடைத்து அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் பிரியங்காவின் அம்மா வசந்தகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார்.அதைச் சாப்பி... மேலும் பார்க்க

தென்காசி: அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை! - பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தென்காசியின் மையப்பகுதியில் உள்ள நடுபல்க் அருகே அரசு வழக்கறிஞரின் அலுவலகம் உள்ளது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், அவரது அலுவலகத்துக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் ... மேலும் பார்க்க

UAE: `கிரிப்டோ மோசடி' பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி - நடந்தது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் தன்னந்தனியான பாலைவன பகுதியில் ரஷ்ய கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.38 வயதான ரோ... மேலும் பார்க்க

பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல்

கோவை விமான நிலையம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கடந்த நவம்பர்2-ம் தேதிகல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடே அதிர்ந்த இந்த வழக்கில்,கோவை மாணவி வழக்குசிவகங்கை மாவட்டத்தைச்ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மாமியாரைக் கொலைசெய்த மருமகன் - உயிருக்குப் போராடும் மனைவி; என்ன நடந்தது?

காஞ்சிபுரம், அருந்ததி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மனைவி சந்தவள்ளி (54). சந்தவள்ளியின் அம்மா திலகா (70). இவர்கள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கூலி வேலை செய்யும் லட்சுமணன் போதைக்க... மேலும் பார்க்க