செய்திகள் :

``தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" - 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

post image

கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த 'யூத்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

இப்படத்தைப் பார்த்த 'காந்தாரா' புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி, சமூக வலைதளத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதில்,``நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் படத்தையும் புன்னகையோடு ரசித்துப் பார்த்தேன். 'யூத்' திரைப்படம் காதல், நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிறைந்துள்ளது.

இது அனைத்து பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அழகான படைப்பு. கென் கருணாஸ், ஒரே ஆளாக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, மிக நேர்த்தியான நடிப்பையும் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. சூரஜ் வெஞ்சாரமூடு சார், தேவதர்ஷினி மேடம் மற்றும் அந்த நண்பர்கள் பட்டாளம் என ஒவ்வொரு நடிகரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் விக்கி என ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவின் பணியும் அற்புதம். தம்பி கென், நீ சினிமா உலகிற்கு ஒரு சொத்தாகத் திகழ்வாய்!" எனப் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தைரியம், நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விஷயம் இது" - 'போக்கிரி' பட இயக்குநர் பற்றி விஜய் சேதுபதி

தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து 'போக்கிரி', கன்னடத்தில் புனித் ராஜ்குமாரை வைத்து 'அப்பு' எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத். அவர் இயக்குநராக அறிமுகமான 'பத்ரி' திரைப்படம் வெளியாக... மேலும் பார்க்க

ஊரை விட்டு கிளம்ப பயமாயிருக்கு; அதான் இப்ப‌ நடிக்கல - 'சின்னத்தம்பி' பட நடிகர் மார்த்தாண்டன்

சின்னதம்பி. 1991ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலை அள்ளிய படம். பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி உள்ளிட்ட முக்கிய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.இந்தப் படத்தில் 'எனக்கு கல்யாண... மேலும் பார்க்க

'அருவிப்போல் அன்பைத் தருவாளே' - இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி!

'ராஜா ராணி' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து, 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர் பாலிவுட்டுக்குள் என்ட்ரி தந்தார். அ... மேலும் பார்க்க

Kara: 'அவர் வேண்டாம்னு சொல்வார்'- நியூமராலஜிபடி தனுஷூக்கு தயாரிப்பாளர் கொடுத்த 'கலை அசுரன்' பட்டம்

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்ச... மேலும் பார்க்க

Kara: "நாங்கெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?" - மீம்ஸுக்கு தனுஷ் சொன்ன பதில்!

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்ச... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு: `விஜய் - சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்!' - நீதிமன்றம்

1999 ஆம் ஆண்டு விஜய் - சங்கீதா இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் 27 ஆண்டுகள் கழித்து விஜய் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வி... மேலும் பார்க்க