செய்திகள் :

"தவெக செய்வது Horse Trading அல்ல, Horse Racing" - பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம்

post image

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைவது என்பது, த.வெ.க, அ.தி.மு.க கட்சிக்குள் நடைபெறும் விஷயம். ஏதாவது தவறு நடந்தால், அப்போது நாங்கள் பேசுவோம்.

இப்பொழுது தவெக, அதிமுக இடையே நடைபெறக்கூடிய பிரச்னையில்,  இப்பொழுது நாங்கள் பேசுவது சரியாக இருக்காது. அ.தி.மு.க எம்.பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் எந்த அடிப்படையில் மனு கொடுத்து உள்ளார்? எந்த அடிப்படையில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது? எம்.எல்.ஏ-க்கள் சொந்தமாகச் சுயமாக முடிவெடுத்து வேற கட்சிக்குச் செல்கின்றனர்.

நேற்று யார் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது? தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், த.வெ.க எம்.எல்.ஏ-வை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு போட சொல்லியதாக  வழக்கு போட்டு இருக்கின்றனர்.

பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரைப் பேரம், அதுதான் ஹார்ஸ் டிரேடிங். பணம் கொடுப்பதாகச் சொல்வதே தவறு, சட்டப்படி இந்தப் பேச்சு எடுத்தாலே தவறு. எம்.எல்.ஏ-க்கள் சுயமாக வேறு கட்சிக்குப் போகின்றனர், இது ஹார்ஸ் ரேசிங்.

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளால் இந்த 50 நாட்களில் யாரைக் கேட்டாலும் ஊழல் குறைந்து இருக்கிறது எனச் சொல்கின்றனர், அரசு அலுவலகங்களில் வேலை விரைவாக நடக்கிறது எனச் சாதாரண மக்கள் பேசுகின்றனர். 50 நாட்களில் இது எவ்வளவு பெரிய புரட்சி? சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்து இருக்கின்றது என்பது தவறு.

இதுவரை என்ன நடந்து கொண்டிருந்ததோ, அது அப்படியே நடந்து கொண்டு இருக்கிறது. சிங்கப் பெண்  திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அமல்படுத்தவே நேரம் ஆகும். 5 ஆண்டுகளில் நடந்ததை 50 நாள்களில் ஒப்பிடுவது சரியாக இருக்காது. 50 நாள்களிலேயே லஞ்சத்தை ஒழித்து இருப்பது ஆச்சரியமானது” என்றார்.

த.வெ.க வாசிங் மெசின் எனக் கனிமொழி எக்ஸ் பதிவு குறித்த கேள்விக்கு, “அவர் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. 2026 மக்கள் தீர்ப்பு மாற்றம் வேண்டும், தி.மு.க எதிர்க்கட்சியில் உட்கார வேண்டும் என்பதுதான். ஏன் திமுக பயப்படுகிறது? எதிர்க்கட்சியின் அமர என்ன பயம்? எதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என பயம்?  தி.மு.க, அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தி ஏன் ஆட்சியைப் பிடிக்க பதற்றப்படுகின்றனர்?” எனப் பதிலளித்தார்.

கல்லா பெட்டி கூட்டணி என விஜய்யால் விமர்சிக்கப்பட்டர்கள் த.வெ.க வசம் சென்றது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் ஆதரவு கொடுத்து இருக்கிறது. நேற்றைய தினம் தேநீர் பார்ட்டியில் கூட்டணி கட்சியினருக்கு மரியாதையும், மதிப்பும் கொடுத்தனர். 60 ஆண்டு காலத்தில் இதெல்லாம் நடந்தது கிடையாது. இந்த 50 நாள்களில் சிறப்பான துவக்கம் நடந்துள்ளது” எனப் பதிலளித்தார்.

"ஸ்டாலினைப் பார்த்து அரசியலுக்கு வந்து சில மாதங்களேயானவர்கள் விமர்சிப்பது அற்பமானது"- டிடிவி தினகரன்

இன்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். இந்த நிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் சென்னை... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 'நேருவின் உறவினர் டெண்டரை நடத்த விடாமல் தடுக்கிறாரா?' - பேருந்து நிலைய கழிப்பறை சர்ச்சை

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் மூலம் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக பேருந்து நிலையம் உள்... மேலும் பார்க்க

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" - திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் திம... மேலும் பார்க்க

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும... மேலும் பார்க்க

"இது ட்ரைலர்தான்; மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம்" - தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் 'பன்ச்'

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி. விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந... மேலும் பார்க்க

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க