செய்திகள் :

'திமுக தாங்களே ஒரு பள்ளத்தை தோண்டி அதில் விழுந்துவிட்டது; சரிவுகாலம் தொடங்கிவிட்டது' - வைகோ

post image

மதுரை திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள துவாரகா பேலஸ்  மண்டபத்தில் மதிமுக மதுரை மாவட்ட செயலாளர் முனியசாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தொடர்ந்து திருமண நிகழ்ச்சியில் பேசிய வைகோ, “இனி மதிமுக கட்சி நிர்வாகிகள் இல்ல விழாவில் சால்வை அணிவிக்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்; அடுத்த 2 மாதத்திற்கு என்னை யாரும் விழா நிகழ்வுகளுக்கு அழைக்காதீர்கள்.

மருத்துவர்கள் எனக்கு ஓய்வு தேவை என்று சொல்லியிருக்கிறார். உங்கள் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து விட்டது. கடினமாக அலைந்து கொண்டிருக்கிறீர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

எனக்கு நெடுநாள் வாழ வேண்டும் உயிர் மீது எல்லாம் ஆசை இல்லை; போதும் நான் வாழ்ந்த வாழ்க்கை; ஆனால் எனக்கு இப்போது இருக்கும் ஒரே எண்ணம் உள்ளுணர்வு என்னவென்றால் மதிமுக கட்சியின் எதிர்காலம்...

கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அது அமைந்துள்ளது; மதிமுகவை ஒரு உயர்ந்த இடத்தில் கொண்டு போய் அமர வைக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாகியுள்ளது;  தற்போது நம் கட்சி தொட்டதெல்லாம் வெற்றியாக அமைந்து கொண்டிருக்கிறது.

வைகோ, விஜய்
வைகோ, விஜய்

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றியது நியாயம் கிடையாது நீதி கிடையாது; உச்ச நீதிமன்றம் செய்தது தவறு; இதற்காக என் மீது வழக்கு கூட தொடுத்தாலும் பரவாயில்லை; உங்கள் விருப்பத்திற்காக உச்சியில்  தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவு போட்டீர்கள். நேற்று இந்துத்துவ அமைப்புகள் அடித்த கும்மாளம், கொண்டாட்டம் எல்லாம் ஐயோ அப்பா நான் மிகவும் வருந்துகிறேன்., உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிக மிக தவறானது நான் வருந்துகிறேன்.

திமுக நிர்வாகிகள் என் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். பழைய திமுக தொண்டர்கள் நிர்வாகிகள்  இன்றும் என் மீது அன்பாக இருக்கிறார்கள். ஆனால் இந்த காலத்தில் உள்ள திமுக நிர்வாகிகள்  இளைஞர்கள் சிலர் என் மீது முதலமைச்சர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆறு மாதங்களில் ஆட்சி கவிழாது. இந்த அரசு ஐந்து ஆண்டுகள் இருக்கும்

மலையில் தீபம்
மலையில் தீபம்

அடுத்த ஐந்து ஆண்டுகளும் தமிழக வெற்றிக் கழக ஆட்சிதான் இருக்கும். இன்று காலையில் மிகவும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா விவகாரத்தில் திமுக பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. திமுக பாஜகவுடன் இணைந்து விட்டார்கள்” என்றார்.

வைகோ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் தீபம் குறித்த கேள்வி எழுப்பிய போது “மரபுகளுக்கு மாறாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரராக வாழ்ந்து வரும் இந்த மதுரை மண்ணில் ஒற்றுமையை குலைக்கின்ற வேலையில் ஈடுபடுகின்ற சக்திகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

தீபச்சுடர் ஏற்றி வைத்தது மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் தருகிறது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் மனதுக்கு தோன்றியது எல்லாம் தீர்ப்பாக தந்து கொண்டிருக்கிறார்கள். நான் நீதிபதிகளை விமர்சிக்க விரும்பவில்லை. நான் நீதிபதிகளை விமர்சிக்க விரும்பவில்லை

தொகுதி மறுவரையறை | Delimitation
தொகுதி மறுவரையறை | Delimitation

தொகுதி மறுவரைவிற்கு திமுக ஆதரவு குறித்த கேள்விக்கு, “தாங்களே ஒரு பள்ளத்தை தோண்டி அதில் திமுக விழுந்துவிட்டது. திமுகவிற்கு பெரும் சரிவுகாலம் தொடங்கிவிட்டது.

இந்திய கூட்டணி ஸ்டாலினை சந்திக்கவுள்ளது குறித்த கேள்விக்கு? யார் யாரைப் பார்த்தால் என்ன?  ராகுல்- சோனியா தலைமையில் இருக்கும் இந்தியா கூட்டணி உறுதியாக நிற்கும், தேர்தலில் வெல்லும்.

நான் சொல்வதை முடிந்தால் பதிவு செய்யுங்கள்" என கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துகொண்டு புறப்பட்டார்.

Delimitation: 39 பெரியதா? 59 பெரியதா? டிரோஜன் குதிரைக்குள் இருப்பது என்ன? | பிரின்ஸ் கஜேந்திர பாபு

கட்டுரையாளர் : பிரின்ஸ் கஜேந்திர பாபுடிரோஜன் குதிரைக்குள் இருப்பது என்ன?இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனித்துவமிக்கது தமிழ்நாடு என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு தளங்களிலும் நிரூபித்து வந்துள்ளோ... மேலும் பார்க்க

"DMKவிற்குத் துரோகம் செய்த Congress, DMKவைப் பார்த்து துரோகம் செய்கிறது என்கிறது" - வானதி சீனிவாசன்

கோவையில் பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. முருக பக்தர்களுடைய கோரிக்கையைப் புற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: Reelsக்காக பைக் சாகசம்; முறித்துப்போன இளைஞரின் கை; வைரலான விழிப்புணர்வு வீடியோ

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் கமலேஷ். இவர், தனது பைக்கில் வேகமாக வந்து முன் சக்கரத்தைத் தூக்கியும், வேகமாகப் பின்னோக்கி திருப்பி பின் சக்கரத்தைத் தூக்கியும் பல்வேறு சாகசங்களைச் செய்து அதனை ... மேலும் பார்க்க

Delimitation: 'தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது ஏன்?' - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

தொகுதி மறுவரையறையில் திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றக் கோரி இந்தியா கூட்டணித் தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னை வந்துகொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில், திமுகவின் இந்த நிலைப்பாடு க... மேலும் பார்க்க

2027 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கோரும் ராகுல் காந்தி; தென்னிந்தியாவுக்கு எதிரானதா?

நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது மத்திய பாஜக அரசு.இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவளித்துள்ளது.ராகுல் காந்தியின் 2027 பதிவுஇந்த நிலையில் நேற்... மேலும் பார்க்க

'காங். சந்திப்பை விரும்பாத ஸ்டாலின்; சோனியா மீது பாரத்தை போட்ட ராகுல்!' - பின்னணி என்ன?

பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்திக்க சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸின் முக்கிய தலைகள் அத்தனை... மேலும் பார்க்க