செய்திகள் :

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடலாசிரியராகும் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன்! எந்தப் படத்தில் தெரியுமா?

post image

மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் 'ராஜா'ஸ் பிளேலிஸ்ட்' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார்.

Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja

இவருடைய கவிதைகளுக்காகவும் சமீபத்தில் பலரின் பாராட்டுகளை இவர் பெற்றிருந்தார்.

யுவன் ஷங்கர் ராஜாவும், மறைந்த நா.முத்துக்குமாரும், 75-க்கும் மேற்பட்ட படங்களில் 400-க்கும் அதிகமான பாடல்களைத் தந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளியான படம் 'தரமணி'.

இவர்களின் கூட்டணியிலிருந்து தமிழ் சினிமாவுக்குப் பல முக்கியமான பாடல்கள் கிடைத்துள்ளன. 'ராஜா'ஸ் பிளேலிஸ்ட்' திரைப்படத்தை, 'குடும்பஸ்தன்' படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என். சுப்பிரமணியம் இயக்கியுள்ளார்.

Raja's Playlist Movie
Raja's Playlist Movie

எலிஃபென்டைன் எக்ஸ் பேனரின் கீழ் ரமணன் பாலகங்காதரன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக இணைந்துள்ளார்.

மேலும், வெங்கட் பிரபு இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இளையராஜாவின் சகோதரர் பாஸ்கரின் மகன் ஜெயன், சோனா ஒளிக்கல், வாகை சந்திரசேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Vijay Sethupathi: "இசையமைப்பாளர் மிஷ்கினுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்" - விஜய் சேதுபதி

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'ட்ரெயின்' திரைப்படம் வருகிற டிசம்பர் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷனுக்காக ட்ரெயின் வ... மேலும் பார்க்க

Train: "இந்த மாதிரி விஜய் சேதுபதியைப் பார்த்ததில்லனு சொன்னாங்க"- 'ட்ரெயின்' பற்றி இயக்குநர் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'ட்ரெயின்' திரைப்படம் வருகிற டிசம்பர் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷனுக்காக ட்ரெயின் வ... மேலும் பார்க்க

"பூமி தட்டை என்று நினைத்திருந்த காலத்தில் மதம் உருவானது" - கிருத்திகா பதிவு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,''பூமி தட்டையானது என்று மனிதர்கள் நினைத்திருந்த காலத்திலும், பாக்டீரியா மற்றும் வைரஸ்... மேலும் பார்க்க

விடுதலை : தத்துவமில்லாத தலைவர்கள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 45

`சினி'ஸ்கோப் 45விடுதலைவாழ்க்கையில் எந்தப் பிடிப்புமே இல்லாத ஒரு மலைவாழ் பெண்ணான தமிழரசிக்கு, குமரேசன் ஒரு சின்ன நம்பிக்கைக் கீற்றைக் கொடுக்கிறான். அதன் பலத்தில் அவள் அவனிடம் பேசுகிறாள். யாரும் கேட்காத... மேலும் பார்க்க

"எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்; அதனால்..." - சிம்புதேவன்

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'நவோரியா' திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது.இத்திரைப்படம் பற்றிச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இய... மேலும் பார்க்க

Delivery Boy: "என் மகன் என்பதாலேயே நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை" - லியோனி கூறியதென்ன?

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆ... மேலும் பார்க்க