செய்திகள் :

திருச்செந்தூர்: `ஜனநாயகன்’ படம் வெளிவந்தால் உங்கள் நாற்காலி காலி' என்ன சொல்கிறார் நாஞ்சில் சம்பத்?

post image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அக்கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ”கடந்த 25 ஆண்டுக்காலம், நாட்டில் குப்பைகளை கொட்டியே பல கோடிகளைத் தேடி தற்போது நீதிமன்றத்தில் ஒரு பொருளாதார குற்றாவாளியாக நிற்கிற ஒருவரை வீட்டிற்கு அனுப்புகிற நாள் நெருங்கி விட்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான்  நான் இங்கு வந்துள்ளேன்” என, திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை குற்றம்சாட்டி பேச்சைத் தொடங்கினார்.

நஞ்சில் சம்பத்

தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் விஜய், அரசியல் களத்தில் நிற்கிறார். கடந்த காலங்களில், தே.மு.தி.க கட்சியை நண்பர் விஜயகாந்த் உருவாக்கினார், மக்கள் நலனூக்காக உழைத்தார். ஆனால், அந்தக் கட்சியில் விருப்பமனு வாங்குவதற்குக்கூட அந்த ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு மாற்றாக அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திட வேண்டும் என்ற வேகத்தில்  உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தார். தி.மு.க மீது கூர்மையைத் தீட்டினார். ஆனால், தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக் கிடக்கிறார். ஜனநாயகனுக்கு எதிராக பராசக்தியா? ஓடியதா பராசக்தி?  

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

அது ஓடவில்லை என்ற போதே தெரியவில்லையா? உங்கள் நாடகம் இனி நடக்காது. ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும்போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும். நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதல்வர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் தம்பி விஜய்தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள்” என்றார்.  

TVK: ``100-க்கும் மேற்பட்ட ரெளடிகள் அராஜகத் தாக்குதல்" - தவெக தலைவர் விஜய் காட்டமான பதிவு!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க சார்பில் விஜய் உள்பட டாப் தலைவர்கள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள தொகுதிகளில் போ... மேலும் பார்க்க

பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?" - அண்ணாமலை ஒப்பன் டாக்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக பா.ஜ.க-வில் மிகப்பெரிய நிர்வாக ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க-வின் 'அமைப்புப் பொதுச்செயலாளர்' என்ற அதிகாரமிக்க ... மேலும் பார்க்க

`நாங்கள் தயார், திமுக தயாரா? குழு அமைக்காதது வருத்தமே!' - டெல்லியில் செல்வப்பெருந்தகை பேட்டி

டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பி... மேலும் பார்க்க

நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்?" - ராகுல் காந்தி கேள்வி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை 'Four Stars of Destiny' நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன... மேலும் பார்க்க

'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்

சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர். சிங்காநல்லூர், பத்மநாபபுரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ... மேலும் பார்க்க

`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' - செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்ட... மேலும் பார்க்க