செய்திகள் :

'நாங்கள் வெனிசுலா இல்லை; ஒருவரை மிரட்டினால் மற்ற அனைவரும் பயப்படுவதற்கு!' - ஈரான் அமைச்சர்

post image

அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துகொண்ட முக்கியமான நபர்களில் ஒருவர் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி.

அவர் ஈரானிய செய்தி நிறுவனத்துடனான பேட்டி ஒன்றில், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை குறிப்பிட்டுள்ளார்...

"நான் விட்காஃபிடம் (அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையாளர்) கேட்டேன், 'எந்த நேரத்திலும் இந்த இடத்தில் குண்டு வீசப்படலாம் என்று நீங்கள் பயப்படும்படியான ஒரு கூட்டத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?

ஈரான் போர்
ஈரான் போர்

நீங்கள் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் வெடித்துச் சிதறலாம் அல்லது அழிக்கப்படலாம் என்ற அச்சத்தோடு எப்போதாவது பேசியிருக்கிறீர்களா?

உதாரணமாக, போன் மூலம் உங்கள் குடும்பத்தினரின் நலனை விசாரிக்கும் போது, இதுவே அவர்களுடன் பேசும் கடைசி முறையாக இருக்கலாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?'

அணுசக்தி செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற கோரிக்கைக்கு நாங்கள் பணிய மறுத்து, உறுதியாக நின்றோம்.

பேச்சுவார்த்தைகள் மூலம் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்த போதுதான், இந்தப் போரைத் தொடங்கினார்கள்.

நீங்கள் பேச்சுவார்த்தை தான் நடத்த வேண்டும். எங்களை மிரட்டவும் முடியாது, விலைக்கு வாங்கவும் முடியாது.

இது ஒன்றும் வெனிசுலா கிடையாது. ஒருவரைப் பிடித்து மிரட்டினால் மற்ற அனைவரும் பயந்து பின்வாங்குவதற்கு." என பேசியதாக தெரிவித்துள்ளார்.

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்ட... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் ... மேலும் பார்க்க