செய்திகள் :

நாடாளுமன்றத்தை நோக்கி 'CJP' இளைஞர்கள் பேரணி : இணையதள சேவை துண்டிப்பு; காவல்துறை தடியடி

post image

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

அவருடைய உடல்நலம் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாகவும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் களத்தில் இறங்கி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடந்தி வருகிறது.

 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'
'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜுலை 20) தொடங்குவதை ஒட்டி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பேரணியை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் பேரணியை இளைஞர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்தப் பேரணியால் நாடாளுமன்றத்தை சுற்றி இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

CJP: ``நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு" - சு. வெங்கடேசன்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகளில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என சிஜேபி அமைப்பு டெல்லியில் போராட்டத்தை முன்னெடு... மேலும் பார்க்க

'தோலை உரிப்பேன், எலும்பை உடைப்பேன்' - முதல்வரை 'இறங்கி' அட்டாக் செய்வதன் பின்னணியும் பின்விளைவும்

'சட்டசபைக் கதவை மூடிப் பார், உன் எலும்பை உடைக்கிறோம்' என முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு மேடையில் முழங்கி (?) கைதாகியிருக்கிறார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.திமுகவில் ஏற்கனவே வெற்... மேலும் பார்க்க

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்... மேலும் பார்க்க

CJP: மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்த சிஜேபி அமைப்பினர் - கொடுத்த கடிதத்தில் என்ன இருந்தது?

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பில் போராட்ட... மேலும் பார்க்க

`பாஜக-வை கோபப்படுத்தாத நாடாளுமன்ற அரசியலை நோக்கி.!' - திமுக, பாஜக கைகோர்க்குமா?

தவெக-வின் வெற்றி தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகளைப் பெரிய அளவில் மாற்றியமைத்து வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பிரதானக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அந்தவகையில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் ... மேலும் பார்க்க