Vijay, Ajith -க்கு அப்புறம் நான்தான்னு போட்டாங்க! - Actor Vignesh's Untold Stori...
மும்பை: 150 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு அனுமதி இல்லை; ஐரோப்பியர்களால் நடத்தப்படும் கிளப் தெரியுமா?
டெல்லியில் பிரதமர் வீட்டிற்கு அருகில் 27 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் ஜிம்கானா கிளப்பில் பணக்காரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த கிளப்பை இப்போது காலி செய்யும்படி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதனை எதிர்த்து கிளப் நிர்வாகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறது.
இந்தக் கிளப் சர்ச்சையில் இப்போது மும்பையில் உள்ள பிரீச் கேண்டி கிளப்பும் சேர்ந்து இருக்கிறது. பிரீச் கேண்டி கிளப்பும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1878ம் ஆண்டு தென்மும்பையில் கட்டப்பட்டது.
இந்தக் கிளப் மும்பையில் வாழும் ஐரோப்பியர்களுக்காகத் தொடங்கப்பட்டது. கடற்கரையையொட்டி நீச்சல் குள வசதியுடன் மிகவும் ஆடம்பரமாகச் செயல்படும் இந்தக் கிளப்பில் இப்போதும் ஐரோப்பியர்கள் மட்டும்தான் நிர்வாக அறங்காவலர்களாக இருக்க முடியும்.

இன்றுவரை, இந்த கிளப் அறக்கட்டளையின் உறுப்பினர் பதவி என்பது பம்பாயின் ஐரோப்பியக் குடிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை, நிர்வாகக் குழுவிற்குப் போட்டியிடும் அதிகாரம் மற்றும் கிளப்பிற்குச் சொந்தமான முதன்மையான அசையாச் சொத்துக்கள் மீதான முழுமையான கட்டுப்பாடு ஆகியவை உரித்தாகின்றன.
இந்தியர்கள் சாதாரண உறுப்பினர்களாக வேண்டுமானால் இணைந்து கொள்ள முடியும். இந்த வசதி கூட 1967ம் ஆண்டுதான் கிடைத்தது. அதுவும் கோர்ட் உத்தரவிட்ட பிறகு இந்தியர்கள் சாதாரண உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு முன்பு கிளப்பிற்குள் நுழைவதாக இருந்தால் ஐரோப்பிய பாஸ்போர்ட்டைக் காட்டினால் மட்டுமே உள்ளே விடுவார்கள்.
மும்பையின் தென்பகுதியில், மலபார் ஹில் அருகே, உயர்தரமான புலேபாய் தேசாய் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்தப் பரந்த கிளப், இன்றும் மிகவும் விரும்பப்படும் ஒன்றாகத் திகழ்கிறது.
இது நீச்சல் குளம், நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், டென்னிஸ் மைதானங்கள் மற்றும் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள உயர்தர உணவகங்களைக் கொண்டுள்ளது. இதன் புகழ்பெற்ற வெளிப்புறக் குளம், ஆங்கிலேயர் ஆட்சியில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக, இந்தியர்கள் அந்தக் கிளப்பின் வாசல் அருகில் கூட செல்ல அனுமதிக்கப்படவில்லை. கறுப்பு தோலுடன் இருந்த ஐரோப்பியர்கள் கூட வாயில்களில் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களிடம் பாஸ்போர்ட்டைக் காட்டும்படி கேட்டனர்.
1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, கிளப் தனது "வெள்ளையர்களுக்கு மட்டுமே" என்ற கொள்கையை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வந்தது. 1960-களில், ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தூதர் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் ஏற்பட்ட சர்வதேச அளவிலான சர்ச்சையைத் தொடர்ந்து இந்த கிளப் இறுதியாக ஐரோப்பியரல்லாதவர்களுக்கும் தனது கதவுகளைத் திறந்தது. ஆனால் இப்போதும் ஐரோப்பியர்கள் மட்டும்தான் உள்ளே சுதந்திரமாக அனைத்து சலுகைகளையும் பெற முடியும்.

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சமூக ஊடகத்தில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து வெளியிட்டு இருந்த ஒரு பழைய பதிவு வைரலானது. அதில் 1960களில்தான் அந்தக் கிளப்பிற்கு சென்றபோது விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், "1960-களின் நடுப்பகுதியில், பம்பாயில் உள்ள 'பிரீச் கேண்டி கிளப்'பில் இருந்து நானே வெளியேற்றப்பட்டேன்; அப்போது, 'வெள்ளையர்களுக்கு மட்டுமே அனுமதி' என்ற விதியை மீறி, ஒரு இந்திய நண்பரைத் தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று எனது அமெரிக்க வகுப்புத் தோழர் ஒருவர் நம்பியிருந்தார். சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகான இந்தியா அது," என்று தரூர் எழுதியுள்ளார்.





















