செய்திகள் :

வா வாத்தியார்: ``நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல நின்னு எம்.ஜி.ஆரை பார்ப்போம்'' - கார்த்தி

post image

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

கார்த்தி- கீர்த்தி ஷெட்டி
கார்த்தி- கீர்த்தி ஷெட்டி

இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.

அதில் பேசியிருக்கும் கார்த்தி, " நான் எம்.ஜி.ஆர் சாரை நேர்ல பார்த்திருக்கேன். எங்க வீட்டுக்கு பின்னாலத்தான் அவருடைய ஆபிஸ் இருக்கும்.

ஈவினிங் அவர் காரு வரும்'னு தெரிஞ்சு நானும் எங்க அண்ணனும் வாட்டர் டேங் மேல உட்கார்ந்திருப்போம்.

அவர் காரை விட்டு இறங்கும்போது மேலத்தான் பார்ப்பாரு. நாங்க கை காமிச்சா இரட்டை இலை மாதிரி கை காமிப்பாரு.

எங்களைப் பார்த்து சிரிச்சிட்டு ஆபிஸ் உள்ள போவாரு. வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை தான் போட்ருப்பாரு.

கார்த்தி- கீர்த்தி ஷெட்டி
கார்த்தி- கீர்த்தி ஷெட்டி

பார்க்கிறதுக்கு ரோஸ் கலர்-ல இருப்பாரு. இதுதான் அவரை நாங்க நேர்ல பார்த்த ஞாபகம்.

எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' படமெல்லாம் எல்லார் வீட்டிலையும் ஓடிக்கிட்டே இருக்கும்.

இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை பத்தி பேசிட்ருக்காங்க. மக்களை அவ்வளவு நேசிருக்காரு.

மக்களை தேடி தேடி போய் உதவி செஞ்சிருக்காரு" என எம்.ஜி.ஆர் குறித்து கார்த்தி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

29 : " 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன், ஏன்னா.!"- ஷான் ரோல்டன்

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்க... மேலும் பார்க்க

" 'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!"- கார்த்தி

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ... மேலும் பார்க்க

"நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!" - `அங்கம்மாள்’ ரகசியம் சொல்லும் பரணி

`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே... மேலும் பார்க்க

"29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..!" - கார்த்திக் சுப்புராஜ்

'மேயாத மான்', 'ஆடை', 'குளு குளு' படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட... மேலும் பார்க்க