ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' - விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!
'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்?
'எண்ணெய்க்காகத் தான் எல்லாம்' - வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறைபிடித்த போது, அரசியல் பார்வையாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.
ட்ரம்ப் பதிவு
இதை உறுதிப்படுத்தும் வகையில், ட்ரம்ப் ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
"30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை வெனிசுலாவின் இடைக்கால அரசு அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்.
அந்த எண்ணெய் சந்தை விலைக்கு விற்கப்படும். அதில் வருகிற பணம் அமெரிக்க அதிபராகிய என்னால் நிர்வாகிக்கப்படும். இந்தப் பணம் வெனிசுலா மக்கள் மற்றும் அமெரிக்காவின் நலனுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்வேன்.

இந்தத் திட்டத்தை உடனே நிறைவேற்றும் படி, எரிசக்தி செயலாளர் கிறிஸிற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த எண்ணெய்களை அமெரிக்க சேமிப்பு கப்பல்கள் அமெரிக்காவிற்கு நேரடியாக கொண்டு வரும்" என்று பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்தப் பதிவு 'இது வெறும் ஆரம்பம்' என்பதை காட்டுகிறது.
வெனிசுலா விஷயத்தில் இந்த மாதிரியான நிகழ்வுகளை இனி அடிக்கடி பார்க்கலாம்.















