செய்திகள் :

”அடுத்த ஜெம்னத்திலும் எளிய தொண்டனாக இருக்கணும்” - உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக நிர்வாகி உருக்கம்

post image

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(32). பூக்கடை நடத்தி வந்த இவர் அதிமுக-வில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராகப் பொறுப்பில் இருந்தார்.

இவருக்கு முனீஸ்வரி(32) என்ற மனைவியும் இரண்டு வயதுடைய நித்யஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் அதிமுக-வில் நிலவும் உட்கட்சி பிரச்னை, பிளவு தொடர்பாக மனஉளைச்சலில் இருந்து வந்த மகேந்திரன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கருத்தை முன் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தானே தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மகேந்திரன்
தற்கொலை செய்து கொண்ட மகேந்திரன்

முன்னதாக மகேந்திரன், தான் பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ''கட்சியில் நடக்குற பிரச்னைகளைப் பார்க்கும்போது என்னை மாதிரி எளிய தொண்டர்கள் ரொம்ப மனவேதனையுடன் இருக்கிறோம். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும்.

என்னுடைய இறப்பிற்குப் பிறகாவது கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்று சேர வேண்டும். என்னுடன் அரசியலில் பயணித்த நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

என் இறப்பிற்குப் பிறகாவது அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். என் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆத்மா சாந்தியடையும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் அதிமுகவின் எளிய தொண்டனாக ஆசைப்படுகிறேன்" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். மகேந்திரன் தற்கொலை அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையான தொண்டனை இழந்து விட்டோம், இனியாவது இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என அதிமுக-வின் ராஜ் சத்யன் குறிப்பிட்டிருப்பதும் கட்சிக்குள் சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ''மகேந்திரன் அதிமுகவின் தீவிரமான தொண்டர். எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான விசுவாசி. கட்சி செயல்பாடுகளில் தீவிரமாகச் செயல்படக் கூடியவர். கட்சி நலன் குறித்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டே இருப்பார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக-வில் நடக்கும் நிகழ்வுகளால் மன உளைச்சலில் இருந்தார். கட்சியினரிடத்திலும், தனக்கு நெருக்கமானவர்களிடத்திலும் இதனைப் பேசி புலம்பிக் கொண்டே இருந்து வந்தவர் உயிரை மாய்த்து கொள்ளும் முடிவெடுப்பார் என்று நினைக்கவில்லை. இப்போது உண்மையான அதிமுக தொண்டனை இழந்து விட்டோம்.

இது எங்களுக்குள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகேந்திரன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியிருக்கிறார். மகேந்திரனின் குடும்பத்திற்கு கட்சி சார்பில் ரூ.30 லட்சம், கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் 25 லட்சம் மற்றும் பிள்ளையின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளனர்.

மகேந்திரன் சொன்னது போல் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே அவரது ஆத்மா சாத்தியடையும்'' என்றனர்.

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் மதிமுக - பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு வெளியிடும் வைகோ?

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக கூட்டணி மறுசீரமைப்பு வேகமெடுத்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு ஜ... மேலும் பார்க்க

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க