செய்திகள் :

'அண்ணாமலை இயக்கத்திற்கு ரஜினி ஆலோசனையா?' - லதா ரஜினிகாந்த் பதில்

post image

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்ற இயக்கத்தைக் கடந்த மார்ச் மாதம் தொடங்கினார். இது தொடர்பான காணொளியை இரண்டு தினங்களுக்கு முன்பு லதா ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை புதிய இயக்கத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த இயக்கமும் தொடங்கப்பட்டிருக்கிறது எனச் சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டது.

ரஜினிகாந்த்- லதா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்- லதா ரஜினிகாந்த்

ஆனால், இந்த இயக்கத்தைக் கடந்த மார்ச் மாதமே லதா ரஜினிகாந்த் தொடங்கிவிட்டார் என அவரே விளக்கம் தந்திருக்கிறார். இந்நிலையில், 'ரிப்பப்ளிக் வோர்ல்ட்' ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்.

'அண்ணாமலையின் மக்கள் இயக்க அறிவிப்புக்குப் பிறகு உங்களுடைய இயக்கம் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டது’ என்று சமூக வலைதளங்களில் பேசப்படுவது குறித்து, '' சமூக வலைதளங்கள் சில நேரங்களில் மிகவும் எதிர்மறையாகவும் டாக்சிக்காகவும் மாறிவிடுகின்றன. அவர்கள் நல்ல விஷயங்களைப் பரப்பலாம் என்பதுதான் என் விருப்பம்.

மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. எங்களுடைய இயக்கத்தின் திட்டங்களை நாங்கள் ஏற்கெனவே வரிசையாக முடிவு செய்து வைத்திருந்தோம்.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

மாநிலத்திற்கான ஒரு சிறந்த இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாங்கள் எங்களின் பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்." என்றவர், அண்ணாமலையின் இயக்கத்திற்கு ரஜினியின் ஆலோசனைகள் இருக்குமா, ரஜினியை அடிக்கடி அண்ணாமலை சந்திக்கிறாரே எனச் சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்படுவது குறித்து லதா ரஜினிகாந்த், "இது குறித்து நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை.

ஏனென்றால், பொதுவாகவே நாங்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்குள் இழுக்கப்படுகிறோம். அதற்கு நாங்கள் ஒவ்வொரு முறையும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது.

உண்மை என்ன என்பது எப்போதும் நிலைத்து நிற்கும். நாங்கள் தூய்மையான நோக்கத்துடன் எங்கள் வேலையைச் செய்து வருகிறோம்.

எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்துவிட்டு, நல்ல ஆற்றல் கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி: தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறைத் தண்டனை! - அதிரடி காட்டிய பெண் நீதிபதி

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. மனைவியை இழந்த முனுசாமிக்கு தற்போதைய வயது 84. இவருக்கு வரதராஜன், திருமுருகன், மீனாட்சி சுந்தரம் என மூன்று மகன்கள் இருக்கின்றன... மேலும் பார்க்க

`எந்தப் பகுத்தறிவும் கிடையாது... உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா?'- கடுகடுக்கும் மேயர் பிரியா

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மேயர் பிரியா, தவெக ஆட்சியையும... மேலும் பார்க்க

'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' - அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிதாக இன்னொரு இயக்கம் கூடியிருக்கிறது.பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை அறிவித்துள்ளார் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.இந்த இயக்கத்தின் முதல் அரசியல் களம் - ... மேலும் பார்க்க

"ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்..!" - ஆதவ் அர்ஜூனாவுக்கு ரிப்ளை கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தவெக-வின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவிக்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார். ஆத... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்தது வீட்டு உபயோக சிலிண்டர் விலை; அதிர்ச்சியில் மக்கள் | Live Updates

மீண்டும் உயர்ந்தது LPG சிலிண்டர் விலை!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு, அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ... மேலும் பார்க்க

`தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் ஒன்றும் கிடையாது’ - சி.பி.ஐ., முத்தரசன்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் தொடங்கி வைத்தார். அதன்பின் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது , “ இந்தியா கூட்ட... மேலும் பார்க்க