செய்திகள் :

அதிகரிக்கும் 'Boss Scam' மோசடி: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு செபி அவசர எச்சரிக்கை!

post image

நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மற்றும் மூத்த அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, ஊழியர்களிடம் பணம் பறிக்கும் 'பாஸ் ஸ்கேம்' மோசடிகள் இந்தியாவில் அண்மைக்காலமாக பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இது குறித்து ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த எச்சரிக்கை செய்தி குறிப்பில், ``நிறுவனங்களின் நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் குறிவைக்கப்படுகின்றனர். மின்னஞ்சல், வாட்ஸ்அப், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் போலி கணக்குகள் உருவாக்கப்படுகின்றன.

செபி

மோசடி செய்பவர்கள் நிறுவனத்தின் CEO அல்லது மூத்த அதிகாரி போல நடித்து ஊழியர்களைத் தொடர்பு கொள்கின்றனர். அவசரத் தேவை என்று கூறி, தங்களது போலி வங்கி கணக்குகளுக்குப் பணத்தை உடனடியாக மாற்றுமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடுகின்றனர். இந்த மோசடியில் மற்றொரு ஆபத்தான தொழில்நுட்ப முறையும் பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குத் தீங்கிழைக்கும் 'மால்வேர்' கோப்புகள் அனுப்பப்படுகின்றன. ஊழியர்கள் இந்த கோப்புகளைத் திறக்கும்போது, அவர்களின் கணினி அல்லது மொபைல் சாதனங்கள் முடக்கப்படுகின்றன. இதன் மூலம் ஊழியர்களின் 'வாட்ஸ்அப் வெப்' கணக்குகளை மோசடி செய்பவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

நிதித்துறை அதிகாரியின் வாட்ஸ்அப் கணக்கை முடக்கிய பிறகு, அந்த அதிகாரியின் பெயரிலேயே கணக்குத் பிரிவில் உள்ள மற்ற ஊழியர்களைத் தொடர்பு கொண்டு போலி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப உத்தரவிடுகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சமூக ஊடகங்கள் அல்லது குறுஞ்செய்திகள் மூலமாக வரும் உத்தரவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, எந்தவொரு நிதிப் பரிவர்த்தனையையும் அல்லது பணப் பரிமாற்றத்தையும் ஊழியர்கள் செய்யக் கூடாது. நிறுவனங்கள் இது குறித்து தங்கள் ஊழியர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ITR: '3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி'- வருமான வரித்துறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் திட்டமிட்டு நாடு தழுவிய அளவில் நடத்திய மிகப் பெரிய போலி வருமான வரி மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. க... மேலும் பார்க்க

'டிராக்டர் வாடகைய கொடுக்கல' - கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

மகாராஷ்டிராவில் இப்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். உழவு பணிகளுக்கு அதிக அளவில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு வாடகைக... மேலும் பார்க்க

கீழே விழுந்த கைப்பை; பைக்கை நிறுத்திய கணவன்; விரட்டிக் கொன்ற காதலன்; ஆந்திராவில் கொடூரம்

தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி அருகில் உள்ள சூளகிரியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹாசினி (19). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சம்பவத்தன... மேலும் பார்க்க

'விவாகரத்தானவர் எனத் தெரிந்ததால்...' - காதலை முறித்த மாணவி; குத்திக்கொன்ற காதலனின் சகோதரர்

பெங்களூரைச் சேர்ந்த அமிர்தா என்ற சட்டக்கல்லூரி மாணவி தனுஷ் என்பவருடன் காதலில் இருந்துள்ளார். தனுஷ் தனக்கு ஏற்கனவே விவாகரத்தானதையும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து காதலித்து வந்தார். ஆனால் இத... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க