செய்திகள் :

`அதிமுகவிலும் குடும்ப அரசியல்' - செங்கோட்டையன் பரபரப்பு தகவல்

post image

அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.

எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அவரை முதலில் மாவட்ட  செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார்கள்.

தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இருந்தே நீக்கினார்கள். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

“புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் நிலவவில்லை. திமுகவை போல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது.

எடப்பாடியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை. இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் பணிகளை செய்து வருகிறேன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தன்னால் முடியாத ஒன்றை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது.” என்றார்.

83 ஆண்டு கால கனவு: `ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் பாதை’ ; ரயில் சத்தம் எப்போது கேட்கும்?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் சுமார் 83 ஆண்டு கால கோரிக்கையான ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தத் திட்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கரின் பகீர் முடிவு; காவல்துறை விசாரணை

தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் என்பவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.தமிழக காங்கிரஸ் கமிட்டி... மேலும் பார்க்க

SIR: திமுக முதல் மநீம வரை எதிர்ப்பு; சொல்லும் காரணங்களும், விமர்சனங்களும் என்னென்ன?

தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடங்குகிறது.இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை திமுக தொடங்கி காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற க... மேலும் பார்க்க

"திமுக-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்" - ஜி.கே.வாசன் ஆருடம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் முறையாக இயங்காததால் விவசாயிகள் கடும் பாதிப்... மேலும் பார்க்க