Aaromaley Movie Review | Kishen Das, Harshath Khan, Shivathmika | Silambarasan T...
``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது" - செங்கோட்டையன் ஓப்பன் டாக்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
``பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி முறியடித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசத்தான் பாஜக என்னை அழைத்தது. ஒருங்கிணைப்பு குறித்து பேசியபோது பழனிசாமி என்ன வார்த்தைகள் கூறினார் என்று எனக்கு தெரியும்.

குடும்பத்தில் சண்டை நடந்தால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்வது இல்லையா? அதெல்லாம் இயல்புதான்.
கொல்லைப்புறம் வழியாக முதலவரானவர் தான் எடப்பாடி பழனிசாமி. கொடநாடு வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்றக் கோரி இதுவரை ஏன் கோரிக்கை வைக்கவில்லை.
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் நான் எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறுவது வேதனை அளிக்கிறது" எடப்பாடியைக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
(More details will be added shortly)















