செய்திகள் :

'அது போதைப்பொருள் இல்லங்க; குழந்தையோட மாத்திரை!' - விளக்கும் தவெக அமைச்சர் சரத்!

post image

தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில், இப்போது அமைச்சர் சரத் அந்த வீடியோ குறித்த விளக்கத்தை கூறியிருக்கிறார்.

பரவும் வீடியோவில்
பரவும் வீடியோவில்

மனிதவளத்துறை அமைச்சர் சரத் சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே தன்னுடைய போனின் திரையில் வைத்து போதைப்பொருள் ஒன்றை பொடியாக்கிக் கொண்டிருப்பதை போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

போதைப் பொருள்களுக்கு எதிரான மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட நிலையில், அமைச்சர் சரத்தின் வீடியோ இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில், அமைச்சர் சரத் இப்போது அந்த வீடியோ குறித்து விளக்கியிருக்கிறார்.

விளக்க வீடியோ
விளக்க வீடியோ

'அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. என் குழந்தைக்கு அப்போது ஒன்றரை வயது. உடம்பு சரியில்லை. குழந்தையின் மாத்திரையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவே அப்படி செய்தேன். கிரிக்கெட் மைதானத்தில் அத்தனை பேருக்கு முன்பாக அத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்? அந்த வீடியோவை வேண்டுமென்றே தவறாக சித்தரிக்கிறார்கள்' எனக் கூறியிருக்கிறார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க