செய்திகள் :

"அதை முடித்துவிட்டு இரவில் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும்" - எம்பிபிஎஸ் பட்டம் பற்றி ஸ்ரீ லீலா

post image

கோலிவுட், டோலிவுட் என இப்போது டிரெண்டிங்காக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இவர் சமீபத்தில் அவருடைய எம்பிபிஎஸ் (MBBS) படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றிருந்தார்.

ஶ்ரீலீலா
ஶ்ரீலீலா

திரையில் நடனமாடுவதையும், வகுப்பறையில் கற்பதையும் நான் சமமாகவே நேசிக்கிறேன். திரையில் நடனமாடுவதையும், வகுப்பறையில் கற்பதையும் நான் சமமாகவே நேசிக்கிறேன். பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும், கடினமான மருத்துவப் படிப்பை அவர் வெற்றிகரமாக முடித்தது பற்றி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீ லீலா.

அந்தப் பேட்டியில் அவர், "ஒரே நேரத்தில் சினிமா மற்றும் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கு மன உறுதியும், பொறுமையும் மிகவும் அவசியம். சில நேரங்களில் ஒரு விஷயத்திலிருந்து மற்றொன்றுக்கு மனதை மாற்றிக்கொள்வது சவாலான காரியம்.

நீண்ட நேரப் படப்பிடிப்பிற்குப் பிறகு இரவில் எம்பிபிஎஸ் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும். சில நாட்களில் 'எனக்கு என்னதான் நடக்கிறது?' என்று பைத்தியம் பிடிப்பது போலத் தோன்றும்.

ஆனால், அந்த இரண்டு பயணங்களையுமே நான் மிகவும் ரசித்தேன். எனக்கு மருத்துவத்துறை மிகவும் பிடிக்கும்.

Sreeleela
Sreeleela

அந்தப் பாடங்களின் மீதுள்ள ஈடுபாட்டால்தான் எனது பெரும்பாலான நேரத்தை அதைப் படிப்பதிலேயே செலவிட்டேன்.

இதற்காகத் திட்டமிடுதல் மற்றும் அமைதியாகச் செயல்படுவது மிக முக்கியம். எந்தவொரு உயரத்தை எட்டவும் குறுக்கு வழிகள் கிடையாது.

விடாமுயற்சியும், ஒழுக்கமுமே ஒருவரை இரண்டு வெவ்வேறு துறைகளில் சாதிக்க வைக்கும். திரையில் நடனமாடுவதையும், வகுப்பறையில் கற்பதையும் நான் சமமாகவே நேசிக்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

Ram Charan: ``நான் கண்டிப்பான தந்தைதான்!" - குழந்தைகள் பற்றி ராம் சரண்

டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண், தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு க்ளின் காரா என்ற மகள் ப... மேலும் பார்க்க

Mani Sharma: "ஹார்மோனியத்தை தூடி தட்டி எடுத்தபோது.!" - கம்பேக் பற்றி பிரபல இசையமைப்பாளர் மணி சர்மா

தமிழ், தெலுங்கு என பல ஹிட் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் மணி ஷர்மா. இன்றும், இவருடைய பாடல்கள்தான் பலருடைய ப்ளேலிஸ்டில் முக்கிய வைப் நம்பர்கள். Mani Sharmaடோலிவுட்டில் வெளிவந்த 'பேபி' திரைப்படத்தின் இய... மேலும் பார்க்க

பைக்கர்: 18 வயது இளைஞனாக மாறிய 41 வயது நடிகர்; '2 ஆண்டுக்கால கடின உழைப்பு' - நடிகர் சர்வானந்த்

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், மோட்டோகிராஸ் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பைக்கர்'. இப்படத்திற்காக நடிகர் சர்வானந்த் மேற்கொண்ட அதிரடி உடல்மாற்றமும், அதன் பின்னணியில் உள்ள உழை... மேலும் பார்க்க

Peddi: "அப்போது சைவ உணவு மட்டுமே" - ராம் சரணின் மல்யுத்த வீரருக்கான உடலமைப்பிற்கு பின்னிருக்கும் கதை

ராம் சரண் நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த ரிலீஸ் தேதியிலிருந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனப் பேசப்படுகிறது. அது... மேலும் பார்க்க

Chiranjeevi: "சூர்யா, கல்விக்காக செய்பவை எனக்கு ஊக்கமளிக்கின்றன!" - புதிய முயற்சியில் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தற்போது 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத... மேலும் பார்க்க

Rashmika: 'நான் கடந்து வந்த பாதை நீண்டது..!' - மாநில விருதை பெற்ற ராஷ்மிகா நெகிழ்ச்சி

தெலங்கானா மாநில அரசின் 'Gaddar' திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது. இதில் 'தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார். ... மேலும் பார்க்க