``நான் ஆசிரமத்துக்குப் போகிறேன்... இனி அங்குதான் இருப்பேன்!" - பிரசாந்த் கிஷோரின...
அன்று கட்சிக்குள் வெடித்த பூகம்பம்; டெல்லி நெருக்கம்! - உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனின் பின்னணி
தமிழக வெற்றி கழகத்தின் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்று இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கபட்டிருக்கிறது. குறிப்பாக மேலூர் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பட்டியலின சமூகத்தை சேர்ந்த விஸ்வநாதனுக்கு உயர்கல்விதுறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யார் இந்த விஸ்வநாதன்?
காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்டவர். 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 87 சதவீத வருகைப்பதிவு, 38 விவாதங்கள் மற்றும் 658 கேள்விகள் என நாடாளுமன்றத்தில் விஸ்வநாதன் காட்டிய வேகம் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என கேள்வி எழுந்த போது கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் விஸ்வநாதனின் பெயரை முன்மொழியவே, உடனே 'டிக்' அடித்திருக்கிறது டெல்லி தலைமை.
ஆனால் மேலூர் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பமே வெடித்தது. பட்டியலின வேட்பாளர் எப்படி பொது தொகுதியில் வெற்றி பெற முடியும், அதுவும் அ.தி.மு.க கோட்டையில் தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வெற்றி பெற வைக்க முடியாது என கட்சியினர் போர்கொடி தூக்கியதோடு வேட்புமனுதாக்கல் செய்ய கூடாது என விஸ்வநாதனுக்கும் அழுத்தமும் கொடுத்து வந்தனர்.
டெல்லி தலைமை பிரச்னையில் தலையிட்டு சரிகட்டவே ஓய்ந்தது உட்கட்சி சண்டை. தேர்தலின் போது விஸ்வநாதன் பிரச்சாரத்தில் காட்டிய வேகம் மக்களை கவர்ந்திருந்தது. முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு அடுத்த படியாக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் மேலூர் தொகுதியில் போட்டியிடுவதால் அந்த சமூக மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கே விழுந்தன. கூட்டணி கட்சியினர் தி.மு.க-வினரும் பட்டியலினத்தவரல்லாத சமூகங்களிடம் பேசி ஓட்டுகளை காங்கிரஸ் பக்கம் திருப்பவே அ.தி.மு.க கோட்டையை உடைத்து வெற்றி கொடி நாட்டினார் விஸ்வநாதன்.
பொது தொகுதியில் வென்ற பட்டியலினத்தவர் என்பதால் தமிழகம் முழுவதும் பேசப்பட்டார் விஸ்வநாதன். த.வெ.க- வும் விஸ்வதானுக்கு அமைச்சர் பதவி கொடுக்க இருக்கிறது என தகவல்கள் வெளியானது. தற்போது உயர்கல்வி துறை அமைச்சராக விஸ்வநாதனை நியமித்திருக்கிறது தமிழக வெற்றிக் கழக அரசு.
கல்வி துறையில் பட்டியலின முகங்கள்
பட்டியலின சமூக மக்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கபடுவதில்லை, அப்படி அமைச்சர் பதவி கொடுக்கபட்டாலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்புகளை தாண்டி முக்கிய கேபினேட் பொறுப்புகள் வழங்கபடுவதில்லை என்கிற விமர்சனங்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
தான் வெற்றி பெற்ற முதல் தேர்தலிலியே பள்ளிக்கல்வி, உயர் கல்வி துறை என இரண்டு அமைச்சர் பொறுப்புகளிலும் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே கொடுத்து தாங்களும் சமூக நீதி அரசு தான் என சொல்லாமல், சொல்லியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.














