செய்திகள் :

"அமலாக்கத்துறை சோதனை ராகுல் காந்திக்கு பெரிய மனநிறைவை தரும்" - ஆவேசமான பினராயி விஜயன்!

post image

திருவனந்தபுரத்தில் ​தனது வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு பினராயி விஜயன் வீட்டுக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். பினராயி விஜயன் பேசுகையில், ​"அனைவருக்கும் தெரிந்தபடி, இன்று காலை 7 மணிக்குத்தான் இந்த வீட்டு வாசலுக்கு அமலாக்கத் துறையினர் வந்தனர். சோதனைக்கு வந்த குழுவினர் தங்களுக்குக் கிடைத்த உத்தரவின்படிதானே வர முடியும் அதிகாரிகள் என்று வரும்போது, தங்களுக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதைக் கேட்க அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். ​வீட்டில் நுழைந்து சோதனை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை விரும்பத் தொடங்கி நீண்ட காலம் ஆகிறது. இந்தச் சோதனை சிலருக்குப் பெரிய மனநிறைவைத் தரும் என்று தோன்றுகிறது. குறிப்பாக ராகுல் காந்திக்கு மனநிறைவை தரும். ஏனெனில், 'ஏன் பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்தவில்லை, ஏன் பினராயி விஜயனை கைது செய்யவில்லை?' என ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தார்.

அமலாக்கத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எம் தொண்டர்கள்

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளை பா.ஜ.க தொடர்ந்து வருகிறது. அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் வலுவான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ​ஆனால், தங்களது கட்சியைச் சேராத மற்றவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையின் அத்துமீறல்கள் நடந்தால் நடக்கட்டும் என்ற சுயநல நிலைப்பாட்டையே காங்கிரஸ் எடுத்துள்ளது. எது எப்படியாக இருந்தாலும், இதோடு நாங்கள் முடிந்துபோகப் போவதில்லை. இதை ஒரு தொடக்கமாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதைக் கொண்டு எங்களைச் சோர்வடையச் செய்துவிடலாம் என்று யாரும் வீணாக நினைக்க வேண்டாம்.

தொண்டர்களிடம் ஆவேசமாக உரையாற்றிய பினராயி விஜயன்

நமது மண்ணின் உணர்வும், கட்சித் தோழர்களின் உணர்வும், எப்போதும் கட்சிக்கு இருக்கும் அளப்பரிய ஆதரவும்தான் இங்கே வெளிப்பட்டது. கட்சியின் எதிரிகள் எங்களைக் கொத்திக்குதற முயன்ற அனைத்துக் கட்டங்களிலும் இந்த ஆதரவுதான் எங்களுக்கு அரணாகக் கிடைத்துள்ளது. அந்த ஆதரவில் எந்தக் குறைவோ அல்லது சலனமோ இல்லை என்பதைத் தோழர்கள் இன்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர். அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதையும் எதிர்கொள்வோம், இதுவே நமது பலம். ஒன்றாக நாம் களமிறங்குவோம்" என்றார்.

அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல... மேலும் பார்க்க

'ஆபரேஷன் இரட்டை இலை' - மதுராந்தகத்தில் ர.ர-க்களின் பிரமாண்ட இணைப்பு விழா; தவெக போடும் ஸ்கெட்ச்!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று பனையூரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். கடந்த வாரம்தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்... மேலும் பார்க்க

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க