செய்திகள் :

அரசன்: மிரட்டலான மூன்றாவது கெட்டப்; வெற்றிமாறன் குட்புக்கில் இடம்பிடித்த சிலம்பரசன் - Arasan அப்டேட்

post image

உற்சாகத்தில் இருக்கிறார் சிலம்பரசன். தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்துள்ள 'அரசன்' படப்பிடிப்பு சென்னையில் சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

சிலம்பரசன்

வடசென்னையை மையமாக வைத்து 'அரசன்' உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான கதையை வெற்றிமாறன் 'பொல்லாதவன்' படப்பிடிப்புக்கு முன்னரே எழுதிவிட்டார். இந்த படம் குறுகிய காலத்தில் எடுத்து விடக்கூடிய படமாக இருக்கும் என்ற திட்டமிடலுடன் ஆரம்பித்த இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. சிலம்பரசனுக்கு இந்த படத்தில் மூன்று வித தோற்றங்கள் இருக்கிறது என்கிறார்கள். இந்த படத்தில் சிலம்பரசன் ஜோடியாக பிரியங்கா மோகன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, விக்ராந்த், யோகிபாபு என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அரசன்

படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தின் பிறந்த நாளின் போது 'அரசன்' புரொமோ வீடியோ வெளியானது நினைவிருக்கலாம். அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் 'அரசன்' கதை ஒன்-லைன் என்றும் சொல்கிறார்கள். கோவில்பட்டி, மதுரை பகுதிகளில் நடந்த முதல் ஷெட்யூலில் சிம்புவுடன், சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் இணைந்தார்கள். விஜய் சேதுபதி இதில் டெரர் போலீஸாக நடிக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. இப்போது 'பாக்கெட் நாவல்' படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, விரைவில் 'அரசன்' படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

சிலம்பரசன்

வெற்றிமாறனின் குட் புக்கில் சிம்புவுக்குத் தனி இடம் கிடைத்திருக்கிறது. படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வரும் சிலம்பரசன், பட வேலைகள் தவிர, தனது உடல்நலம், கற்றல், எதிர்கால டார்கெட்டுகள் மிது அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் 'அரசன்' படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகளை ரெடி செய்துவிட்ட வெற்றிமாறன், அதை தயாரிப்பாளர் தாணு, சிலம்பரசன் ஆகியோருக்கு திரையிட்டுக் காண்பித்திருக்கிறார். படத்தைப் பார்த்த சிலம்பரசன் ரொம்பவே ஹேப்பியாகியிருக்கிறார். படத்தின் காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, நடிகர்களின் நடிப்பு மற்றும் மொத்த திரை வெளிப்பாடு ஆகியவை அவரை வெகுவாக கவர்ந்துவிட, அடுத்து வரும் கெட்டப்பில் இன்னும் மெனக்கெட திட்டமிட்டு வருகிறார். சமீப காலமாகத் தன் வேலை, பொறுப்பு, நீண்டகால திட்டமிடல்கள் மீது முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் சிலம்பரசன். படப்பிடிப்பில் அவர் காட்டி வரும் கடின உழைப்பையும் பாராட்டி வருகின்றனர்.

Samantha: "சமந்தா ஒரு பெண் என்பதைத் தாண்டி ஒரு போராளி!" - நடிகை கெளதமி

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

`விஜய் சார், இதைவிட பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்று...' - முதல்வரைச் சந்தித்த சமந்தா

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இன்... மேலும் பார்க்க

Engal Thangam: "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்!" - சென்னையில் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

"இந்த விழிப்புணர்வை உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும்..!" - நடிகை சமந்தாவின் புதிய பிசினஸ்

திரைப்பிரபலங்கள் பலரும் சினிமாவைத் தாண்டி பல்வேறு பிசினஸ்களை நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான திரைப்பிரபலங்கள் சொந்தமாகவே உணவகங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களைத் தாண்டி இன்னும் பலர் பல்வேறு துறைகளில்... மேலும் பார்க்க

"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜூன்.16) சந்தித்தார். பிரதமர் மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை​கள் குறித்த சிறப்புப் புத்​தகங்​களை ரஜினி​காந்த்திற்... மேலும் பார்க்க

Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' - தங்கம் தென்னரசு மகள் இமையா பதில்

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகளான இமயா 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை... மேலும் பார்க்க