செய்திகள் :

அரசியலில் தனித்துவிடப்பட்டதா த.வெ.க... என்ன பிளான் வைத்திருக்கிறார் விஜய்?

post image

தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில், ஆட்சியில் பங்கு என த.வெ.க தலைவர் விஜய் போகிற போக்கில் சொன்ன செய்தியானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் மாற்றி யோசிக்கவைத்தது. ஆட்சியில் பங்கு என்ற ஆசையில், திமுக கூட்டணிக்குள் களபேரம் ஆன அதேநேரத்தில் சின்ன கட்சிகள் த.வெ.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல ஆர்வமானது. ஆனால், எதுவும் கைக்கூடாமல் தற்போதைய நிலைமையில் தனித்துவிடப்பட்ட நிலையில்தான் த.வெ.க தவிக்கிறது என்று குமுறுகிறார்கள் கட்சியின் சீனியர்கள். த.வெ.க-வுக்குள் என்ன நடக்கிறது... விரிவாக விசாரித்தோம்.

இதுதொடர்பாக த.வெ.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் பேசினோம்.

" ஆட்சியில் பங்கு என்ற அதிகாரப் பகிர்வு குறித்து தலைவர் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில்தான், விஜய் தமிழ் தேசிய கொள்கையை கையில் எடுக்கபோகிறார் என்று செய்தியறிந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க-வுடன் கூட்டணி சேர்ந்து பயணிக்க விருப்பப்பட்டார். த.வெ.க தரப்பில் கூட்டணி அறிவிப்பும் வராத நிலையிலும், ' அவன் என் தம்பி... நான் எப்பவும் ஆதரிப்பேன்... என்னை எதிர்த்து அவர் வேலை செய்தாலும் நான் ஆதரிப்பேன்... அது ஒரு பிரச்னை கிடையாது' என்றிருந்தார் சீமான்.

சீமான்
சீமான்

அதைத்தொடர்ந்து சீமான், விஜய் சந்திப்பு அடிக்கடி நடந்துகொண்டேதான் இருந்தது. அதன்படி, நா.த.க-வுடன் கூட்டணி வைக்க விஜய்யும் விரும்புகிறார் என்று எல்லா நிர்வாகிகளும் புரிந்துகொண்டோம். ஆனால், சீமானை மறைமுகமாக முதல் மாநாட்டில் விஜய் விமர்சனம் செய்தபிறகு, நா.த.க பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. இதன்மூலம், அண்ணன் தம்பி உறவு முறிந்துபோனது.

இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடான உறவை அ.தி.மு.க முறித்திருந்தால், த.வெ.க தலைமையுடன் கூட்டணி அமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், த.வெ.க தலைமையின் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட பிரமாண்ட கோரிக்கைகளை அ.தி.மு.க-வால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதைத்தொடர்ந்தே பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துவிட்டது அ.தி.மு.க. இருப்பினும், கரூர் சம்பவத்தில் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து களமாடியது அ.தி.மு.க. த.வெ.க-வின் குரலாய் சட்டமன்றத்திலும் எடப்பாடி பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக என்.டி.ஏ கூட்டணிக்கு வரும்படி அழைப்பு கொடுத்திருந்தது அ.தி.மு.க. ஆனால், த.வெ.க தலைமை அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

விஜய், ராகுல் காந்தி

இதற்கிடையேதான், காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என பெரும் கனவுக்கோட்டையை கட்டிவைத்திருந்தோம். ஏனென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குக்கான வாக்கு வங்கி எல்லா நிலையிலுமே உள்ளன. பிற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸில்தான் சாதி மத பாகுபாடு குறைவு. தேசிய அளவில் காங்கிரஸுக்கு இருக்கும் பவர் லாபி, வேறு எந்தக் கட்சிக்குமில்லை. தி.மு.க அ.தி.மு.க-வுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸில்தான் அமைப்பு வலுவாக இருக்கிறது. அதனால்தான், காங்கிரஸை தி.மு.க விடாமல் வைத்துக்கொண்டே இருக்கிறது. வேறு எந்த கட்சியைவிடவும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால், நல்லது என த.வெ.க முடிவெடுத்தது. அதனால்தான், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வழியக்க வந்தபோதும் காங்கிரஸ்மீது கண்ணாக இருந்தது த.வெ.க. ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளிவரும் எண்ணத்தில் காங்கிரஸார் முழுமையாக இல்லை என்பதால், பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில்தான், பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் பரிதாப நிலையை வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. இருப்பினும், பீகார் அரசியல் களம்வேறு தமிழ்நாடு அரசியல் களம் வேறு என்று த.வெ.க திடமாக நம்புகிறது. ஆனால், தற்போதிருக்கும் நிலைமையில் காங்கிரஸ், அணிமாறி ரிஸ்க் எடுக்குமா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி.

பீகார் தேர்தல் முடிவு சாதகமாக வருமென்று காங்கிரஸ் நம்பியபோதே, த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று முழுமையாக முடிவெடுக்கவில்லை. மாறாக, தி.மு.க-வுடன் கூட்டணி பேரத்துக்காகதான் த.வெ.க-வை காங்கிரஸ் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. தற்போது, கூட்டணி பேரம் செய்யும் நிலைமையில் காங்கிரஸ் இல்லை. எனவே, எங்களுடான பேச்சுவார்த்தையையே முறிக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது.

திருமா
திருமா

இதற்கிடையே, தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வை எப்படியாவது வெளியே கொண்டு வந்து, தங்களோடு கூட்டணியை ஏற்படுத்த ஆயத்தமானது த.வெ.க தலைமை. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே பிடிகொடுக்காமல் கைநழுவிவிட்டார் திருமாவளவன். அதேபோல, அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன், ஓ.பி.எஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க முட்டிமோதினார்கள். வழிய வந்து, விஜய் குறித்துப் பெரிதாகப் பேசினார்கள். ஆனால், யாரையுமே தலைமை கண்டுகொள்ளவில்லை.

டிடிவி தினகரன், ஓபிஎஸ்

இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தினகரன், ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டும் வரும் முயற்சியில் பா.ஜ.க தீவிரமாக இறங்கியிருப்பதால், அதுவும் கைகூடாமல் போயிவிட்டது. இப்படி வழிய வந்தவர்களையும் விட்டுவிட்டு, தேடிச் சென்றவர்களையும் தொலைவிட்டு தனி மரமாக நிற்கிறோம். கூட்டணி விவகாரத்தில் த.வெ.க-விடம் பிளான் பி இல்லை. காங்கிரஸை நம்பிதான், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து, வழிய வந்த அதிமுக-வைவும் வேண்டாமென்றுவிட்டோம். இதற்கிடையே, அமைப்பு கட்டமைப்பு இல்லாததால் எஸ்.ஐ.ஆர் பணிகளும் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. நான்குமுனை போட்டியாக தமிழக அரசியல் களம் உருவாகியிருக்கும் சூழலில், கூட்டணி அமையாமல் தனித்துப்போட்டியிடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஆனால், கூட்டணி குறித்து தலைமையிடம் பிளான் பி எதுவும் இல்லாததால், செய்வதறியாமல் நிற்கிறோம்" என்றனர் விரக்தியாக.

10-வது முறையாக நாளை முதல்வராகிறார் நிதிஷ்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி? | முழு லிஸ்ட்

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியாக 202 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது.கடந்த சட்டமன்றத் தேர்தலை... மேலும் பார்க்க

'பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது' - கோவையில் நரேந்திர மோடி பேச்சு

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்தார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பளி... மேலும் பார்க்க

பீகார்: ``எனக்கு பெரிய அதிர்ச்சி" - தேர்தல் சவால் குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர்!

பீகாரின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டது, அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி. அந்த நம்பிக்கையில், நடந்து முடிந்த சட்டமன்றத... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று!" - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அம... மேலும் பார்க்க

Aishwarya Rai: ``ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள்" - புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ... மேலும் பார்க்க