"என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள்" - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளி...
Roja: "பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது" - ரோஜா பேட்டி
ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார்.
12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்திருக்கிறார்.

அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார்.
விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா, என்.டி.ஆர்தான் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்கள்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரும் உடல்நலப் பிரச்னைகளால் பெரிதளவில் வர முடியவில்லை. இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள்.
அவர்களும் சிலர் இப்போ இங்கே இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.

படம் மாதிரி இது கிடையாது. இது வாழ்க்கை. மனதில் நினைக்கிற விஷயங்கள்தான் நம் முகத்தில் தெரியும்.
எப்போதுமே வேட்பாளருக்கு சாதி முக்கியம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் ரொம்ப முக்கியம்.
இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்களென்று பார்த்து, அதற்கேற்ப விஜய் சார் பிளான் பண்ண வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாணை நான் பார்த்திருக்கிறேன்.
கட்சி தொடங்கி அவர் போட்டியே போடவில்லை. ‘அவருக்கு ஓட்டு போடுங்கள், இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேக்கேஜ் பேசிட்டு இருந்தாரு.
பிறகு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.
இப்போ ஒன்றிய அரசோடும், தெலுங்கு தேசம் கட்சியோடும் இணைந்து போட்டியிட்டார். கடந்த தேர்தலில் நிறைய தில்லுமுல்லு விஷயங்கள் நடந்தன. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொன்னார்.
ஆனா, இப்பவும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டேதான் இருக்கார். அவருடைய தொகுதியில் மழை வெள்ளத்தினால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள்.

பவன் கல்யாண் வந்து அவர்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கிற நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள்?
மக்கள் காசில் தன்னுடைய பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர், சுற்றி 10 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்னு பவன் கல்யாண் இருக்காரு.
விஜய் சார் பவன் கல்யாண் மாதிரி இல்லாம, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் மாதிரி இருக்கணும் என்று சொல்ல விரும்புறேன்.” என்றார்.


















