செய்திகள் :

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

post image

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்த விவகாரம் வனத்துறையின் கவனத்திற்குச்‌ சென்ற நிலையில், விக்ரம் மட்டுமன்றி மனித குரங்கை வாங்கியவர்கள், விற்பனை செய்தவர்கள், இடைத்தரகர்களாக இருந்தவர்கள் எனப் பலரிடம் வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Vikram

இந்த நிலையில், மணிப்பூரிலிருந்து 3 லார் கிப்பன் குரங்குகளை ஈரோட்டுக்குக் கொண்டுவந்து பண்ணையில் வைத்திருந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரது பண்ணையிலும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இவரது பண்ணையில் இருந்துதான் அந்த கிப்பன் குரங்கு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு விற்பனை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், "மத்திய அரசின் 'பரிவேஷ்' இணையதளப் பதிவின்படி மணிப்பூரைச் சேர்ந்த ஒரு நபர் இந்த குரங்குகளை வளர்க்கப் பதிவு செய்திருந்தார். அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் தத்தெடுப்பு முறையில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கே. கேசவநாதன் என்பவரது பண்ணைக்கு 3 லார் கிப்பன் குரங்குகள்‌ கொண்டு வரப்பட்டுள்ளன. அவருக்குச் சொந்தமான விலங்குகள் வளர்ப்புப் பண்ணையில் ஈரோடு மாவட்ட வன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ஒரு மனித குரங்கு இறந்திருக்கிறது.

Erode

அது குறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தெரிவிக்காமல் மறைத்திருக்கிறார். மேலும், மனித குரங்கை வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்களை சரியான முறையில் பராமரிக்காமல் கால தாமதமாக விண்ணப்பித்திருக்கிறார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வனக்குற்ற சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பு உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க

கரூர்: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - த.வெ.க நிர்வாகி மீது புகார்; தற்கொலைக்கு முயன்ற கணவர்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பாலவிடுதி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திர... மேலும் பார்க்க

உதவிய காதலன்; மயக்க மருந்து கலந்து கொடுத்து மர்ம உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கணவனை கொன்ற மனைவி

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சங்கம் விஹாரில் வசித்து வந்தவர் முன்னாலால்(55). கடந்த 10ம் தேதி முன்னா லால் சங்கம் விஹாரின் ரதியா மார்க் பகுதியில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்று அதிக... மேலும் பார்க்க

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் 23 வயதான மகள் Phoebe Gates, தான் இணை நிறுவனராக இருக்கும் 'ஃபியா' (Phia) என்ற ஷாப்பிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 'குக்கீ ஸ்டஃப்பிங்' (Cookie stuffin... மேலும் பார்க்க